விடியற் காலையில் சூரியன் உதயமாவதற்குச் சற்று முன்னதாக பிரம்ம முகூர்த்தம் என்கின்ற இரவின் விடியலாகத் திகழும் அருணம் என்கின்ற அருணோதய காலத்தில் விளக்கு தீபம் ஏற்றி வழிபட்டால் எல்லாவித யோகத்தையும் பெறலாம்.
அதேபோல் மாலையில் சூரியன் மறைவதற்குச் சற்று முன்னதாக, பிரதோஷ காலம் என்கிற உன்னதமான காலத்தில் விளக்கு தீபம் ஏற்றி வழிபட்டால், குடும்பத்தில் செல்வம் பெருகும். மற்றும் எல்லாவிதமான யோக பாக்கியங்களும் பெறலாம்.
விதிமுறைகள்:
பூஜை தொடங்கும் முன் வீட்டில் சுமங்கலி குத்துவிளக்கை ஏற்றி விட்டு வணங்கிய பிறகு, பூஜை செய்தால் நிச்சயம் பலன் உண்டு.
விளக்கு தீபம் ஏற்றும்போது முதலில் விளக்கில் நெய் அல்லது எண்ணெய் ஆகியவற்றை ஊற்றிய பிறகே பஞ்சு திரியிட்டு தீபம் ஏற்ற வேண்டும். அப்படி முறையாக ஏற்றிய தீபம் வீட்டில் உள்ள இருளை அகற்றுவதோடு, வீட்டில் உள்ளோர் அனைவரின் மன இருளையும் அகற்றி தெளிவான சிந்தனையைத் தூண்டி சிறந்த முறையில் செயாலாற்ற வைத்து நிலையான அமைதியைத் தரும்.
இரண்டு திரி சேர்த்து முறுக்கி ஏற்றுவது நலம். நாம் ஏற்றும் திரியை புறுத்து அதற்கு உண்டான பலன்களை அடையலாம்.
சுடருக்கு தன்னை சுற்றி உள்ள தேவையற்ற கதிர்களை (நெகட்டிவ் எனர்ஜியை) ஈர்க்கும் சக்தி உண்டு. அவ்வாறு ஈர்க்கும் போது, நம்மை சுற்றி பாசிட்டிவ் எனர்ஜி அதிகரிக்கும்.