Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தை மாத வெள்ளிக்கிழமைகளில் அம்மனை வழிபடுவதால் உண்டாகும் பலன்கள் !!

Webdunia
வெள்ளி, 11 பிப்ரவரி 2022 (12:21 IST)
தை மாத வெள்ளிக்கிழமை அம்பாளுக்கு உரிய நல்ல நாளாகும். இந்த நாளில், அம்பாள் குடிகொண்டிருக்கும் ஆலயங்களில் சிறப்பு வழிபாடுகள், விசேஷ பூஜைகள் நடைபெறும்.


வெள்ளிக்கிழமையில் விரதம் இருந்து அம்பிகையை வழிபட்டால், செல்வ வளம் பெருகும். எத்தனை வெள்ளிக்கிழமை வந்தாலும், தை வெள்ளிக் கிழமைகளுக்கும், ஆடி வெள்ளிக் கிழமைகளுக்கும் தனிப்பெருமை உண்டு. இந்த இரண்டு மாதங்களிலும் வரும் வெள்ளிக்கிழமைகளில் தெற்கு நோக்கிய அம்பிகையையும், வடக்கு நோக்கிய அம்பிகையையும் வழிபாடு செய்து வர வேண்டும்.

வடக்கு நோக்கிய அம்பிகையை வழிபட்டால் எதிர்ப்புகள் நீங்கும். இன்னல்கள் விலகும். போராட்ட நிலைகள் மாறி, வாழ்வில் புதிய திருப்பங்கள் தோன்றும்.
தெற்கு நோக்கிய அம்பிகையை வழிபட்டால் செல்வநிலை மேம்படும். செயல்பாடுகளில் வெற்றி உண்டாகும்.

ஆகவேதான் அள்ளித் தரும் சுக்கிரனுக்குரிய வெள்ளிக்கிழமையை, உத்தராயண காலமாகிய தை மாதத்தில் தவறாமல் கடைபிடிக்க வேண்டும் என்று நம் முன்னோர்கள் வகுத்து வைத்துள்ளனர்.

வெள்ளிக்கிழமை நாட்களில் அபிராமி அந்தாதி, மீனாட்சியம்மை கலி வெண்பா, சௌந்தர்ய லஹரி, லலிதா சஹஸ்ரநாமம், அபிராமி அம்மைப் பதிகம் முதலியவற்றில் ஏதாவது ஒன்றைப் பாராயணம் செய்வது நன்மையை அளிக்கும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாம் லக்ஷ்மி கடாக்ஷத்துடன் வாழ சில மந்திரங்கள்...!

மூலாதாரக் குண்டலினி; வள்ளலார் அருளுரை

கணவன் மனைவி உறவை மேம்படுத்தும் குபேர மூலை!

வாஸ்து - மேல் நிலை நீர்த் தேக்கத் தொட்டி அமைக்கும் முறை..

வாஸ்து படி வீட்டிற்கு எத்தனை வாசல் இருக்க வேண்டும்?

அடுத்த கட்டுரையில்
Show comments