பைரவர் சிவனின் 64 வடிவங்களில் மகாஞானியான, ரௌத்ர தோற்றம் கொண்டவர். எல்லா சிவாலயங்களிலும் பைரவர் இருப்பார். இன்னும் சொல்லப்போனால் பைரவரே கோயிலின் காவல் தெய்வமாகவும் இருப்பவர்.
ஸ்ரீ பைரவரின் அருளாசியைப் பெறவும், பைரவரின் காட்சி பெறவும், உங்கள் துன்பங்கள் துயரங்கள் அனைத்தும் நீங்கவும், உங்களின் நியாயமான கோரிக்கைகள் உடனடியாக நிறைவேற இவ்வாறு செய்தால் போதும்.
அடுத்தடுத்து வரும் ஐந்து புதன் கிழமைகளில் உங்கள் அருகில் இருக்கும் காலபைரவர் அல்லது ஸ்ரீ சொர்ண ஆகர்ஷன பைரவர், சன்னிதானத்திற்கு சென்று. இரண்டு நெய் தீபம் பைரவர் சந்நிதியில் ஏற்றி, குறைந்தது கால் கிலோ டைமண்ட் கல்கண்டு படையுங்கள், அருகிலே அமர்ந்து குறைந்தது பதினைந்து நிமிடமாவது உங்களுடைய பிரார்த்தனை அல்லது கோரிக்கை மனதில் நிறுத்தி தியானம் செய்யுங்கள்.
பிரார்த்தனை செய்து முடித்தப்பின்னர், அந்த டயமண்டு கல்கண்டுகளில் பாதியை அங்கே இருப்பவர்களுக்கு பகிர்ந்து கொடுங்கள். மீதியை நீங்கள் வீட்டுக்குக் கொண்டு செல்லுங்கள். உங்களது கோரிக்கைகள் முழுமையாக நிறைவேறிவிடும். முடிந்தால் இத்துடன் மரிக்கொழுந்து, செவ்வரளி, அவல்பாயாசத்துடன் பிரார்த்தனை செய்வது மிகவும் நல்லது.