நாம் எப்போதும் சுவாமி படங்கள் அல்லது விக்ரகங்களை கிழக்கு அல்லது வடக்கு திசை பார்த்து வைத்து வழிபாடு செய்யலாம்.
சுவாமி படங்கள் கிழக்கு திசை நோக்கி இருந்தால் பூஜை செய்பவர் வடக்கு திசை நோக்கி அமர்ந்து வழிபாடு செய்யலாம்.
சுவாமி படம் வடக்கு திசை நோக்கி இருந்தால் நீங்கள் கிழக்கு திசை நோக்கி அமர்ந்து வழிபாடு செய்ய வேண்டும். இதுதான் நீங்கள் சரியான வழிபாடு செய்யும் திசைக்கான சாஸ்திரம்.
பொதுவாக சுவாமி படங்கள் பெண் தெய்வங்களாக இருக்கும் நிலையில் அந்த பெண் தெய்வங்களுக்கு நேருக்கு நேராக அமர்ந்து வழிபாடு செய்யலாம். இது பெண் தெய்வங்களை வழிபடும் பொழுது மட்டும்தான்.
தெற்கு நோக்கி சாமி படங்களை வைக்க கூடாது. அதுபோல உடைந்த சாமிபடங்கள் சாமி விக்கிரகங்கள் பூஜையறையில் வைக்க கூடாது. அதுபோல் பூஜையறையில் நம்முடைய முன்னோர்களின் படங்கள் சாமிக்கு நிகராக இருக்க கூடாது.