Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விளக்கேற்றும்போது செய்யக்கூடாத சில முக்கிய செயல்கள் என்ன தெரியுமா...?

Webdunia
காலை 3 மணி முதல் 5 மணிக்குள் விளக்கேற்ற சர்வமங்கள யோகத்தை தரும். மாலை 6 மணி அளவில் வீட்டில் விளக்கேற்றி மகாலட்சுமியை வழிபட வேலை, நல்ல கணவன், குடும்ப சுகம், புத்திர சுகம் ஆகியவை கிட்டும். 
காலை விளக்கேற்றும்போது உடல், மனம் சுத்தத்துடன், வாசலில் சாணம் தெளித்து, கோலம் போட்ட பின்னரே விளக்கேற்ற வேண்டும்.
 
மாலையில் விளக்கேற்றும்போது, வாசலில் தண்ணீர் தெளித்துக்கோலம் போட்ட பின்னரே விளக்கேற்ற வேண்டும். காலை, மாலை விளக்கேற்றும்போது கொல்லைப்புறக் கதவைச் சாத்திடவேண்டும். கொலைப்புறக்கதவு இல்லாதவர்கள் பின் பக்கம் உள்ள ஜன்னல் கதவைச்  சாத்தியே விளக்கேற்ற வேண்டும்.
 
விளக்கேற்றிய பிறகு தலை சீவக்கூடாது. வீட்டைப் பெருக்கிக் கூட்டக்கூடாது. சுமங்கலிப் பெண் விளக்கேற்றியவுடன் வெளியே செல்லக்  கூடாது.
 
விளக்கேற்றியவுடன் துணி துவைக்கக் கூடாது. விளக்கேற்றியவுடன் தலை குளிக்கக் கூடாது. விளக்கேற்றும் நேரத்தில் உறங்கக் கூடாது. விளக்கேற்றியவுடன் சாப்பிடக்கூடாது. விளக்கேற்றிய பிறகு பால், மோர், உப்பு, தவிடு, சுண்ணாம்பு, அரிசி, கடன் ஆகியவற்றைக்  கொடுக்கக்கூடாது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாம் லக்ஷ்மி கடாக்ஷத்துடன் வாழ சில மந்திரங்கள்...!

மூலாதாரக் குண்டலினி; வள்ளலார் அருளுரை

கணவன் மனைவி உறவை மேம்படுத்தும் குபேர மூலை!

வாஸ்து - மேல் நிலை நீர்த் தேக்கத் தொட்டி அமைக்கும் முறை..

வாஸ்து படி வீட்டிற்கு எத்தனை வாசல் இருக்க வேண்டும்?

அடுத்த கட்டுரையில்
Show comments