ஈசனின் ஆணைப்படி அஞ்சனையின் தவத்தை நெச்சி வாயுதேவன் ஓர் அற்புதக்கனியைப் பரிசளித்து ஆசிர்வதித்தார். அந்தக் கனியை உண்ட அஞ்சனை கருவுற்றாள். மார்கழி மாத மூல நட்சத்திர நன்னாளில் அனுமன் அவதரித்தார்.
சிவசக்தி அருளால் தோன்றிய அனுமன் வாயுபுத்திரன், அஞ்சனை மைந்தன், ஆஞ்சநேயன் என்று திருப்பெயர்கள் கொண்டார். சகல ஆனந்தங்களையும் அள்ளித்தருபவர் ஆஞ்சநேயர் என்று புராணங்கள் கூறுகின்றன. சிவனையும் திருமாலையும் ஒன்றிணைக்கும் தெய்வமாக விளங்குபவர் ஆஞ்சநேயர்.
இந்த மந்திரத்தை தினமும் காலையில் எழுந்து, குளித்து முடித்துவிட்டு 108 முறை சொல்லி வந்தால் திடீர் விபத்துக்கள், ஆபத்துக்கள் ஏற்படாமல் காக்கும்.
மந்திரம்:
ஆவ்ம் ஐம் ப்ரீம் ஹனுமதே
ஸ்ரீ ராமா தூதாய நமஹ்
சிரஞ்சீவியாக இருக்கின்ற ஸ்ரீ அனுமனின் சக்தி வாய்ந்த பீஜ மந்திரம் இது. இந்த மந்திரத்தை தினமும் காலையில் எழுந்து, குளித்து முடித்துவிட்டு 108 உரு ஜெபிப்பது நல்லது. செவ்வாய் மற்றும் சனிக்கிழமைகளில் உடல் மற்றும் மன சுத்தியுடன், வீட்டில் சிறிய அளவில் இருக்கும் ஆஞ்சநேயர் படத்திற்கு சிவப்பு நிற மலர்களை சாற்றி, இம்மந்திரத்தை 1008 முறை உரு ஜெபித்து வழிபடுவதால் நீங்கள் ஈடுபடும் எத்தகைய காரியங்களிலும் தடை, தாமதங்கள் ஏற்படாது.
திடீர் விபத்துக்கள், ஆபத்துக்கள் ஏற்படாமல் காக்கும். சோம்பல் குணம் நீங்கும். எதிர்மறை சக்திகள், தீய எண்ணம் கொண்ட மனிதர்கள் போன்றவை உங்களையும், உங்களை சார்ந்தவர்களும் அணுகாமல் காக்கும் கவசமாக இம்மந்திரம் இருக்கும்.