Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருஷ்டி தோஷங்களை போக்கும் எலுமிச்சம் பழம்..!!

Webdunia
சிவபெருமானின் நேத்ர கனி என்று எலுமிச்சம் பழம் அழைக்கப்படுகின்றன. எலுமிச்சம் பழம் இறை வழிபாட்டில் மிக முக்கிய அங்கம் வகிக்கிறது. திருஷ்டி தோஷ நிவர்த்தி செய்வதில் எலுமிச்சம் பழத்தின் பங்கு மிக முக்கியமானது.
மஞ்சள் நிறத்தில் தோற்றம் அளிக்கும் எலுமிச்சம் பழம் பல்வேறு வகையான எதிர்வினை தீய சக்திகளை தம்முள் கிரகித்து பஸ்மம் செய்யும்  ஆற்றல் கொண்டது.
 
எலுமிச்சம் பழத்தை அரிந்து குங்குமத்தில் தோய்த்து அதை இரு கைகளால் சாறு பிழிந்து திருஷ்டி கழித்து போட திருஷ்டி விலகும். இது புதிய பொருட்களுக்கு செய்யும் திருஷ்டி கழிப்பு முறைகளுள் ஒன்றாகும்.
 
வீடுகள், அலுவலகங்கள் இவற்றின் தலைவாசல் படியில் இரு பக்கங்களிலும் ஒரு எலுமிச்சம் பழத்தின் இரண்டு அரை வட்ட பகுதிகளாக பிளந்து, அதில் குங்குமம் தடவி வைத்துவிட வேண்டும். எவ்வித தீய எதிர்வினை சக்திகளும் உள்ளே செல்வதை தடுக்கும் சக்தி கொண்டதே  குங்குமம் தடவிய எலுமிச்சம் பழம்.
 
எலுமிச்சம் பழம், காய்ந்த மிளகாய், படிகாரம், உத்திரசங்கு இவைகளை ஒரு கறுப்பு கம்பளி கயிற்றில் கட்டி தலைவாசல் படியின் மேற்புறத்தில் தொங்க விட எவ்வித திருஷ்டி தோஷமும் அணுகாமல் பாதுகாக்கும்.
 
வண்டி வாகனங்களில் முன்புறத்தில் பலர் பார்வையில் படும்படியாக 2, 3, 5, 7 என்ற எண்ணிக்கையில் எலுமிச்சம் பழங்களை வரிசையாக அமைத்து ஒரு கயிற்றில் கட்டி தொங்க விட வேண்டும். இதனால் பார்வை திருஷ்டிகளை அறவே தடுக்கலாம்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாம் லக்ஷ்மி கடாக்ஷத்துடன் வாழ சில மந்திரங்கள்...!

மூலாதாரக் குண்டலினி; வள்ளலார் அருளுரை

கணவன் மனைவி உறவை மேம்படுத்தும் குபேர மூலை!

வாஸ்து - மேல் நிலை நீர்த் தேக்கத் தொட்டி அமைக்கும் முறை..

வாஸ்து படி வீட்டிற்கு எத்தனை வாசல் இருக்க வேண்டும்?

அடுத்த கட்டுரையில்
Show comments