வீட்டில் பூஜை மற்றும் எந்த ஒரு விஷேசம் நடந்தாலும் அதில் ஒரு முக்கிய இடம் தேங்காய்க்கு உண்டு. எந்த ஒரு சடங்கிற்கும் தேங்காய் உடைப்பது வழக்கத்தில் உள்ளது.
இவ்வாறு வீட்டில் அல்லது கோவிலில் பூஜைக்கு கொடுத்த தேங்காய் அழுகிய நிலையில் இருந்தால் அபசகுணம் என சிலர் கூறுவார்கள். தேங்காயில் மூன்று கண்கள் இருக்கும். இதில் முதல் கண் பிரம்மன், இரண்டாம் கண் லட்சுமி, மூன்றாம் கண் சிவனாக போற்றப்படுகிறது.
தேங்காய் உடைக்கும்போது அது அழுகிய நிலையில் இருந்தால் ஆன்மீகம் சார்ந்து இருப்பவர்களுக்கு அது ஏமாற்றத்தை, கலக்கத்தை ஒரு மன குழப்பத்தை அளிக்கும். இதை ஒரு அபசகுணமாக பார்க்கப்படுகிறது. ஆனால் உடைக்கும்போது அழுகிய தேங்காய் வருவது நல்ல அறிகுறி என்றும், உங்களை சுற்றியிருக்கும் தீய சக்திகள், பீடை, கண் திருஷ்டி போன்றவை அகன்று போகிறது என்றும் கூறப்படுகிறது.
நீங்கள் உடைக்கும் தேங்காய் கொப்பரையாக இருந்தால் உங்கள் வீட்டில் சுப காரியங்கள் நடக்க வாய்ப்புகள் இருக்கிறது. உடைக்கும் தேங்காயில் பூ இருந்தால் உங்களுக்கு பணவரவு, நல்ல லாபம் எதிர்பாராத நல்லவை நடக்கும் என்பதை குறிக்கும் சகுனமாக காணப்படுகிறது.