Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ருத்ராட்சத்தின் மகிமைகளும் அதன் பலன்களும் !!

ருத்ராட்சத்தின் மகிமைகளும் அதன் பலன்களும் !!
சிவபெருமான் கண்களிலிருந்து தோன்றியது ருத்ராட்சம். அதை அணிபவரை அவர் கண்போலக் காப்பாற்றுவார். எனவே அனைவரும் கண்டிப்பாக ஐந்து முக ஒரு  ருத்ராட்சமாவது எப்போதும் கண்டிப்பாக அணிந்திருக்க வேண்டும்.

ஆமாம் ருத்ராட்சத்தை யார் வேண்டுமானாலும் அணியலாம். எல்லா நேரத்திலும் அணிந்திருக்கலாம். நீர் பருகும் போதும், உணவு உண்ணும்போதும், தூங்கும்போதும்  எல்லாக் காலத்திலும் ருத்ராட்சம் அணிந்திருக்க வேண்டும் என்று சிவபெருமானே கூறியுள்ளதாக சிவபுராணம் தெரிவிக்கிறது.
 
சிவனடியார்கள் மற்றும் சிவ பக்தர்கள், தங்கள் கழுத்தில் பயபக்தியுடன் அணிந்திருக்கும் சிவ சின்னம் ‘ருத்ராட்சம்.’ ‘ருத்திரன்’ என்பது சிவபெருமானையும், ‘அட்சம்’ என்பது கண்களையும் குறிப்பதாகும்.
 
சிவபெருமானின் நெற்றிக்கண்ணில் இருந்து வழிந்த கண்ணீர் துளிகளே ‘ருத்ராட்சம்’ என்று கூறப்படுகிறது. ருத்ராட்ச மணிகளில் இயற்கையாகவே அமைந்திருக்கும் முகங்கள் பற்றியும், அவற்றை அணிவதால் கிடைக்கும் பயன்கள் பற்றியும் இங்கே காணலாம்.
 
ருத்ராட்சம் முகங்கள்: ருத்ராட்சத்தில் உள்ள கோடுகளை முகம் என கூறுகின்றோம். 5 கோடுகள் இருந்தால் ஐந்து முக ருத்ராட்சம், ஆறு கோடுகள் இருந்தால் ஆறு முக ருத்ராட்சம் என கூறப்படுகின்றது. மொத்தம் 1 முதல் 21 முக ருத்ராட்சங்கள் உள்ளன. ஒவ்வொன்றும் ஒவ்வொரு விசேஷ பலன்களைத் தரக்கூடியது.
 
ஒரு முக ருத்ராட்சத்தை மாலையாகவோ, ஜெப மாலையாகவோ பயன்படுத்தி வந்தால், ஜாதகத்தில் சூரியனால் ஏற்பட்ட பாதகங்கள் நீங்கும். பிரம்மஹத்தி தோஷம்  போக்கும் சக்தி படைத்தது. ஆன்மிக தன்மை அளிக்கும் ஆற்றல் உண்டு.
 
அர்த்தநாரீஸ்வர வடிவம் கொண்டது. இந்த இரு முக ருத்ராட்சம் கிடைப்பது மிகவும் அரிது. சந்திரனின் ஆதிக்கம் பெற்றது. பத்ம புராணம் இதை அக்னியின் ஆதிக்கம் பெற்றதாக கூறுகிறது. பசுவை கொன்ற பாவத்தை போக்கும்.
 
மூன்று முக ருத்ராட்சம் செவ்வாயின் ஆதிக்கத்தைப் பெற்றது. இந்த ருத்ராட்சத்தை அணிந்தால் உடலில் உள்ள சோர்வு, பலவீனம் நீங்கும். இது சிவனுடைய  மூன்று கண்களாக விளங்கும் சோம, சூரிய, அக்னி என்ற 3 அம்சங்களுடைய வடிவங்களைக் குறிப்பதாகும். இதன் அதிபதிகள் சூரியன், சுக்ரன், அக்னி தேவன்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மகாவிஷ்ணுவையும் மஹாலக்ஷ்மியையும் வழிபட உகந்த காலங்கள் என்ன...?