Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நவராத்திரி நாட்களில் கொலு வைத்து பூஜை செய்து வழிபாடு...!!

Webdunia
நவராத்திரி என்பது முப்பெரும் தேவிகளான அலைமகள், கலைமகள், மலைமகள் ஆகியோருக்கு மூன்று நாட்கள் வீதம் விரதம் இருந்து  வழிபடுவதாகும். நவராத்திரி என்பது உலக மக்களை காப்பதற்காக அம்பிகை தீய சக்திகளுடன் போரிட்டு வெற்றிபெறும் நாளாகும். 
நவராத்திரியான ஒன்பது நாட்களிலும் விபத்துக்களிலிருந்து நம்மை காத்துக்கொள்ள அம்பிகை வழிபடுதல் மிகவும் நல்லது. நவராத்திரியான  ஒன்பது தினங்களும் அம்பிகைக்கு ஒன்பது விதமான புஷ்பங்களை கொண்டு ஒன்பது விதமான அலங்காரங்கள் செய்யப்படும். சோழர்கள்  காலத்தில் நவராத்திரி அரசவிழாவாக கொண்டாடப்பட்டது.
 
நவராத்திரியின் போது வீடுகளில் கொலு வைத்து நவராத்திரியை கொண்டாடுவார்கள். இறைவன் அருள் பெற கொலு வைத்து ஒன்பது  நாட்களும் விரதம் இருந்து பூஜை செய்து வழிபடுவார்கள். பல கோவில்களிலும் கொலு வைத்து பூஜை செய்து வழிபடுதலும் வழக்கத்தில்  உள்ளது.
 
நவராத்திரி விரதம் மிக முக்கியமான விரதங்களில் ஒன்றாகும். கன்னிப்பெண்களையும், 10 வயதுக்கு உட்பட்ட பெண் குழந்தைகளையும் இப்பூஜையில் முக்கியமாக கருதுவார்கள். நவராத்திரி பூஜை மிக முக்கியமான ஒன்றாக கருதப்பட்டு இன்றும் சிறப்பாக கோவில்கள் மற்றும்  வீடுகளில் கொண்டாடப்பட்டு வருகிறது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாம் லக்ஷ்மி கடாக்ஷத்துடன் வாழ சில மந்திரங்கள்...!

மூலாதாரக் குண்டலினி; வள்ளலார் அருளுரை

கணவன் மனைவி உறவை மேம்படுத்தும் குபேர மூலை!

வாஸ்து - மேல் நிலை நீர்த் தேக்கத் தொட்டி அமைக்கும் முறை..

வாஸ்து படி வீட்டிற்கு எத்தனை வாசல் இருக்க வேண்டும்?

அடுத்த கட்டுரையில்
Show comments