Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
मंगलवार, 15 अक्टूबर 2024
webdunia
Advertiesment

பல்லி நம் உடலில் எந்த பாகத்தில் விழுந்தால் என்ன பலன்...?

பல்லி நம் உடலில் எந்த பாகத்தில் விழுந்தால் என்ன பலன்...?
பல்லி விழுந்தால் பலன் பார்க்கப்படுகிரது தெரியுமா? இதற்கென ஒரு படிப்பு உள்ளது என்பது தெரியுமா? அதுதான் பல்லி சாஸ்திரம். இந்த  பல்லி சாஸ்திரத்தில், பல்லி கத்துவது பல்லி நம் உடலில் விழுந்தால் என்ன பலன் என்பது குறித்து கொடுக்கப்பட்டுள்ளது.
தலையின் இடது பக்கம் பல்லி விழுந்தால் துன்பம், வலது பக்கம் விழுந்தால் கலகம்.
 
நெற்றியின் இடது பக்கம் பல்லி விழுந்தால் கீர்த்தி. வலது பக்கம் பல்லி விழுந்தால் லட்சுமிகரம்.
 
வயிற்றின் இடது பக்கம் பல்லி விழுந்தால் மகிழ்ச்சி. வலது பக்கம் பல்லி விழுந்தால் தானியம்.
 
முதுகின் இடது பக்கம் பல்லி விழுந்தால் கவலை. வலது பக்கம் பல்லி விழுந்தால் நஷ்டம்.
 
கண் : இடது பக்கம் பல்லிவிழுந்தால் பயம். வலது பக்கம் பல்லிவிழுந்தால் சுகம்.
 
தோல் : இடது பக்கம் பல்லி விழுந்தால் வெற்றி. வலது பக்கம் பல்லி விழுந்தாலும் வெற்றி.
 
பிருஷ்டம் : இடது பக்கம் பல்லிவிழுந்தால் செல்வம். வலது பக்கம் பல்லிவிழுந்தால் சுகம்.
 
கபாலம் : இடது பக்கம் பல்லி விழுந்தால் வரவு. வலது பக்கம் பல்லி விழுந்தாலும் வரவு.
 
கணுக்கால் : இடது பக்கம் பல்லி விழுந்தால் பயணம். வலது பக்கம் பல்லி விழுந்தால் செலவு.
webdunia
மூக்கு : இடது பக்கம் பல்லி விழுந்தால் கவலை. வலது பக்கம் பல்லி விழுந்தால் வியாதி.
 
மணிக்கட்டு : இடது பக்கம் பல்லி-விழுந்தால் கீர்த்தி. வலது பக்கம் பல்லி விழுந்தால் பீடை.
 
தொடை : இடது பக்கம் பல்லி விழுந்தால் சஞ்சலம். 
 
நகம் : இடது பக்கம் பல்லி விழுந்தால் நஷ்டம். வலது பக்கம் பல்லி விழுந்தால் செலவு.
 
காது : இடது பக்கம் பல்லி விழுந்தால் லாபம். வலது பக்கம் பல்லி விழுந்தால் ஆயுள்.
 
மார்பு : இடது பக்கம் பல்லி விழுந்தால் சுகம். வலது பக்கம் பல்லி விழுந்தால் லாபம்.
 
கழுத்து : இடது பக்கம் பல்லி விழுந்தால் வெற்றி. வலது பக்கம் பல்லி விழுந்தால் பகை.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கரூர்: சக்கரத்தாழ்வார் ஆலயத்தில் சக்கரத்தாழ்வார் ஜெயந்தி விழா