Daily Horoscope
✕

ஜீவ சமாதிகளைப் பற்றி சித்தர்கள் கூறுவது....!

Webdunia
ஜீவ சமாதிகளைப்பற்றி சித்தர்கள் வகுத்துள்ள விதிகளையும் வகைகளையும் பற்றி தெரிந்து கொள்வோம்.
நிர்விகற்ப சமாதி: பிரம்மத்தில் லயம் பெற்ற, மறுபிறவியற்ற நிலை.
 
விகற்ப சமாதி: மனதில் நன்மை தீமை ஆகிய இருமை நிலையுடன் கூடிய சமாதி. இந்த சமாதியில் மறுபிறவிக்கு வாய்ப்பு உண்டு.
 
சஞ்சீவனி சமாதி: உடலுக்கு மண்ணிலும் மனதுக்கு விண்ணிலும் சஞ்சீவித் தன்மையை அளிக்கும் நிலை. மறுபிறப்பற்ற நிலை.
 
காயகல்ப சமாதி: சமாதிக்குப் பின் உடலை மட்டும் பாதுகாப்பாக வைத்துப் பேண உதவும் சமாதி நிலை. மறுபிறப்புக்கு வாய்ப்பு உண்டு. சாதகன் நினைத்தால்  மீண்டும் பழைய உடலுக்குள் பிரவேசிக்க இயலும்.
 
ஒளி சமாதி: நெடிய யோகப் பயிற்சியின் வழியாக சாதகன் பரு உடலை ஒளி உடலாக உருமாற்றிக் கொள்ளும் நிலை.
 
மேலும் மகாசமாதி, விதர்க்க சமாதி, விசார சமாதி, அசம்பிரக்ஞாத சமாதி, சபீஜ சமாதி ஆகிய வேறு வகைகளும் உண்டு.
 
பதினெட்டு சித்தர்களில் தன்னை ஒடுக்கி முதலில் ஜீவசமாதி நிலை அடைந்தவர் சித்தர் திருமூலரே. ஜீவசமாதிகளை எவ்வாறு நிலை நிறுத்துவது என்பது குறித்தும், அவற்றின் விதிமுறைகள் குறித்தும் திருமூலரின் திருமந்திரம் தெளிவாகப் பேசுகிறது. 'சமாதிக் கிரியை' என்ற தலைப்பில் விளக்கப் பாடல்கள்  அமைந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பிறக்காத குழந்தைகளின் உணவை நாம் உண்கிறோம். சத்குரு பேச்சு

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில்!.. கட்டண விரைவு தரிசனம் ரத்து!..

புரட்டாசி பிரதோஷம், மகாளய அமாவாசை: சதுரகிரி கோயிலுக்கு நாளை முதல் பக்தர்கள் செல்ல அனுமதி!

சத்குருவின் மண் காப்போம் இயக்கம் சார்பில் ‘அக்ரி ஸ்டார்ட் அப் திருவிழா 3.O..

புதிய சாதனையை படைத்த பத்ரிநாத்!.. 17.79 லட்சம் பக்தர்கள் வருகை!...

அடுத்த கட்டுரையில்
Show comments