Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மார்கழி மாதத்தில் வரும் ஏகாதசியின் சிறப்புகள் !!

Webdunia
புதன், 12 ஜனவரி 2022 (17:37 IST)
மார்கழி மாதத்தில் வரும் வளர்பிறை ஏகாதசி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.


திருமங்கையாழ்வார் மார்கழி மாதத்தில் வரும் ஏகாதசியை 'வைகுண்ட ஏகாதசி" உற்சவமாக கொண்டாட ஏற்பாடு செய்தார். ஏகாதசி என்ற சொல்லுக்குப் பதினோராம் தினம் என்று பொருள்.

ஞானேந்திரியங்கள் ஐந்து, கர்மேந்திரியங்கள் ஐந்து, மனம் ஒன்று ஆகிய பதினொன்றையும் பெருமாளுடன் ஐக்கியப்படுத்தி தியானம் இருப்பதே ஏகாதசி விரதம்.

உடலாலும், உள்ளத்தாலும் பெருமாளுடன் ஒன்றியிருப்பதே உண்மையான உபவாசம் ஆகும். இத்தகைய பெருமைக்குரிய மார்கழி மாதத்தில்தான் வைகுண்ட ஏகாதசி என்று சொல்லப்படுகின்ற சொர்க்கவாசல் திறப்பு நிகழ்வு நடைபெறுகிறது.

ஆண்டு முழுவதும் அடைத்து வைத்திருக்கும் கதவு வைகுண்ட ஏகாதசி அன்று மட்டும்தான் திறந்து வைக்கப்படும். சொர்க்கவாசலின் வழியாக நாம் நுழைந்து வந்தால் சிக்கல்கள் தீரும். செல்வ வளம் பெருகும்.

ஒவ்வொரு ஏகாதசி நாளிலும் உண்ணாநோன்பிருந்து இறைவனை வழிபடுவதால் தங்களின் பாவம் குறையும் சங்கடங்கள் தீரும். விஷ்ணுபுராணம் என்ற நூலில் அனைத்து ஏகாதசி நாட்களிலும் விரதமிருந்து பெறும் பயனை வைகுண்ட ஏகாதசி அன்று இருக்கும் ஒருநாள் விரதத்தால் பெறலாம் எனக் சாஸ்திரங்கள் கூறுகின்றன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாம் லக்ஷ்மி கடாக்ஷத்துடன் வாழ சில மந்திரங்கள்...!

மூலாதாரக் குண்டலினி; வள்ளலார் அருளுரை

கணவன் மனைவி உறவை மேம்படுத்தும் குபேர மூலை!

வாஸ்து - மேல் நிலை நீர்த் தேக்கத் தொட்டி அமைக்கும் முறை..

வாஸ்து படி வீட்டிற்கு எத்தனை வாசல் இருக்க வேண்டும்?

அடுத்த கட்டுரையில்
Show comments