தீபம் எற்றுவதற்கு உகந்த நேரமாக கருதப்படுவது அதிகாலை பிரம்ம முகூர்த்தமான நான்கு மணி முதல் ஆறு மணி வரையும் (சூரிய உதயதிற்கு முன்) மாலை ஆறு மணி முதல் ஏழு மணி வரை (சூரிய உதயதிற்கு பின்).
தீபம் ஏற்றி வழிபடுவதால் கிடைக்கும் பலன்கள் என்ன...?
காலையில் ஏற்றி வழிபட்டால் அனைத்து செயல்களும் நன்மையைத் தரும், மற்றும் பெரும் புண்ணியம் உண்டாகும். முன்வினைப் பாவம் விலகும்.
மாலையில் 4.30-6க்கு இடையே உள்ள பிரதோஷ வேளை சிவபெருமானுக்கும், நரசிம்ம மூர்த்திக்கும் மிகவும் உகந்தவை. இவ்வேளையில் தீபமேற்றினால் திருமணத்தடை, கல்வித்தடை நீங்கும் என்பது ஐதீகம் மற்றும் வீட்டில் லெட்சுமி வாசம் செய்வாள்.
விளக்கு ஏற்றும் முறை: ஒரு முகம் ஏற்றினால் - நினைத்த செயல்கள் நடக்கும். இரு முகம் ஏற்றினால் - குடும்ப ஒற்றுமை கிட்டும். முன்று முகம் ஏற்றினால்- புத்திரதோஷம் நீங்கும். நான்கு முகம் ஏற்றினால் - பசு, பூமி, செல்வம், சர்வபீடை நிவர்த்தி ஆகும். ஐந்து முகம் ஏற்றினால் - சகலநன்மையும்,ஐஸ்வர்யம் பெருகும்.
விளக்கேற்றும் திசை: கிழக்கு - துன்பம் நீங்குதல், குடும்ப அபிவிருத்தி. மேற்கு - கடன், தோஷம் நீங்கும். வடக்கு - திருமணத்தடை அகலும். தெற்கு நோக்கி விளக்கேற்றக்கூடாது (மரணபயம் உண்டாகும்).
எண்ணெய்யின் பலன்கள்: தீபமேற்ற பயன்படுத்தும் எண்ணெய்யின் பலனைப் பொறுத்தும் பலன் கிடைக்கும்.
நெய் - செல்வவிருத்தி, நினைத்தது கைகூடும்
நல்லெண்ணெய் - ஆரோக்கியம் அதிகரிக்கும்
தேங்காய் எண்ணெய் - வசீகரம் கூடும்
இலுப்பை எண்ணெய், விளக்கெண்ணெய் - புகழ் தரும்.
ஐந்து கூட்டு எண்ணெய் (விளக்கெண்ணெய், இலுப்பை எண்ணெய், நெய், நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய் ) - அம்மன் அருள்.
வேப்பெண்ணெய் - கணவன் மனைவி உறவு நலம் பெறவும், மற்றவர்களின் உதவி பெறவும்.
ஆமணக்கு எண்ணெய் - அவரவர்கள் தங்கள் குல தெய்வத்தின் முழு அருளையும் பெற வழி செய்வது.
கடலை எண்ணெய், கடுகு எண்ணெய், பாமாயில் போன்றவைகளைக் கொண்டு ஒருபோதும் விளக்கேற்றவே கூடாது. மனக்கவலையையும், தொல்லைகளையும், பாவங்களையுமே பெருக்க வல்லவை இந்த எண்ணையின் தீபங்கள்.