வீட்டின் தலைவாசல் பகுதி மிகவும் முக்கியமான பகுதியாக உள்ளது. வீடு என்பது குடிகொண்டு வாழும் ஒரு ஆலயம். அந்த வீட்டின் முன்பகுதி அமைந்துள்ள இடம், அதாவது தலைவாசல் பகுதி உள்ள இடம் வீட்டிக்கான ஒரு இதயப் பகுதியை போல கருதப்படுகிறது.
ஒரு வீடு என்றாலே, அந்த வீட்டின் தலைவாசல் தான் அந்த வீட்டையே நிர்ணயிக்கும். நம் வீட்டில் இருக்கக்கூடிய மொத்த சக்திகளை அனுப்புகின்ற ஒரே வழி தலைவாசல் பகுதியாகும்.
நம் வீடு என்பது பஞ்ச பூதங்கள் குடிக்கொண்டிருக்கும் ஒரு ஆலயம். நாம் வீட்டை விட்டு எங்கு சென்று வந்தாலும், நம் வீட்டு படியை தாண்டி உள்ளே வரும்போதுதான் ஒரு திருப்தி ஏற்படும். அது வேறு எங்கும் கிடைப்பதில்லை.
நம்முடைய வீட்டுக்கு எப்படி தலைவாசல் முக்கியமாக உள்ளதோ அதேப்போல தான் தலைவாசல் கதவும் அமைந்துள்ளது. அந்த காலத்தில் தலைவாசலின் உயரத்தை குறைத்து வைக்கும் வழக்கம் உண்டு. இது எதற்காக என்றால், தலைவாசல் வழியாக உள்ளே செல்லும்போது குனிந்து அதனை வணங்கும் விதமாக செல்லவேண்டும் என்பதற்காகத்தான்.
தலைவாசல் வழியாக உள்ளே செல்லும்போது குனிந்து செல்வது சிறப்பான ஒன்றாகும். ஏனென்றால் தலைவாசலில் மகா லட்சுமியும், அஷ்ட லட்சுமிகளும் குடிக்கொண்டிருக்கிறார்கள். கும்ப தேவதைகள் இரு பக்கங்களிலும் அமர்ந்திருப்பதாக கூறப்படுகிறது. ஆகவே இவர்களை வணங்கும் பொருட்டு அவ்வாறு செய்தல் வேண்டும்.
தலைவாசலை முடிந்தவரையில் மிதிக்காமல் உள்ளே செல்லவேண்டும் என்றும் கூறப்படுகிறது. தலைவாசலில் உட்காருவது, ஒற்றை காலில் நிற்பது, தலை வைத்து படுக்கக் கூடாது. தினமும் முடிந்தவரையில் காலையில் தலை வாசற்படியில் மஞ்சள் கரைத்த நீரை தெளித்துவிடவேண்டும்.
வாசற்படியின் மேல் பகுதியில் ஆணிகளை அடிக்காமல், சுவரில் அடிப்பது நல்லது. மாதத்தில் ஒருமுறையாவது 11 இலைகளை கொண்டு மாவிலை தோரணம் கட்டவேண்டும். இதனால் துர்சக்திகள் உள் நுழைவதை தடுக்கும்.
வீட்டிற்குள் நுழைவதற்கு முன், கை கால்களை கழுவிக் கொண்டு உள்ளே நுழையவேண்டும். கிரக லட்சுமி வாசம் செய்யும் இடம் வாசற்படி என்பதால் அங்கு நின்றுக்கொண்டு தும்புவதோ, கதை பேசிக்கொண்டோ இருக்க கூடாது. மேலும் வாடிய பூக்கள் அல்லது மாலைகளை அப்படியே வைக்கக் கூடாது.