Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குபேர தீபத்தை ஏற்றி வழிபட உகந்த நேரம் என்ன...?

Webdunia
குபேரனின் அருள் கிடைக்க குபேர தீபம் ஏற்றி வழிபட வேண்டும். குபேரன் செல்வத்தின் அதிபதி. வற்றாத செல்வத்தை நமக்கு கொடுக்கக்கூடியவர். யாருக்கெல்லாம் பணம் என்றும் தன்னுடன் இருக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறதோ அவர்கள் குபேர பூஜை  செய்வது நல்லது.
குபேர தீபத்தை வார வாரம் வியாழக்கிழமைகளில் செய்து வர எல்லா வளங்களும் கிடைக்கும். குபேர தீபம் ஏற்ற சரியான நேரம் குபேரருக்கு உகந்த நேரமான வியாழக்கிழமை மாலை 5 மணி முதல் 8 மணி ஆகும். இந்த நேரத்தில் நம் வீட்டு வாசலில் தண்ணீர் தெளித்து, பச்சரிசி  மாவினால் கோலம் போட்டு அதற்கு செம்மண் பட்டை இட்டு அழகுபடுத்த வேண்டும்.
 
நிலைப்படிக்கு மஞ்சள் தெளித்து சந்தனம் குங்குமம் வைக்க வேண்டும். புள்ளிகள் இல்லாத எலுமிச்சை பழத்தை இரண்டாக நறுக்கி, ஒரு பகுதியில் மஞ்சளும் மற்றொரு பகுதியில் குங்குமமும் தடவ வேண்டும். நிலைப்படிக்கு ஒரு பக்கத்தில் மஞ்சள் தடவிய எலுமிச்சை  பழத்தையும், மறு பக்கத்தில் குங்குமம் தடவிய எலுமிச்சை பழத்தையும் இருபுறமும் வைக்கவும். நிலைப்படிக்கு இருபுறமும் பூ வைக்க வேண்டும். தினமும் எலுமிச்சை பழத்தை மாற்றிக் கொண்டே இருக்க வேண்டும். காய்ந்த பழத்தை கால்மிதி படாத இடமாக பார்த்து போட  வேண்டும்.


 
வீட்டுவாசலில் நின்றபடி நமது இடதுபுறம் குபேர விளக்கை ஒரு மரப்பலகை அல்லது தட்டில் வைத்து கிழக்கு பார்த்து தீபம் எரியும்படி வைக்க வேண்டும். முதலில் விளக்கில் நல்லெண்ணெய் தீபம் ஊற்றி இரு திரிகளை ஒரு திரியாக்கி ஏற்ற வேண்டும்.இவ்வாறு ஏற்றுவதால்  நமக்கு குபேரனின் அருள் கிடைக்கும் என்பது ஐதீகம்.
 
இப்படி செய்வதன் மூலம் குடும்பத்தில் உள்ள சங்கடங்கள் துண்பங்கள் கடன் பிரச்சனைகள் அனைத்தம் பனி போல் கரையும். குபேரன் நமக்கு தங்குதடையில்லா செல்வத்தை அள்ளிக்கொடுப்பார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாம் லக்ஷ்மி கடாக்ஷத்துடன் வாழ சில மந்திரங்கள்...!

மூலாதாரக் குண்டலினி; வள்ளலார் அருளுரை

கணவன் மனைவி உறவை மேம்படுத்தும் குபேர மூலை!

வாஸ்து - மேல் நிலை நீர்த் தேக்கத் தொட்டி அமைக்கும் முறை..

வாஸ்து படி வீட்டிற்கு எத்தனை வாசல் இருக்க வேண்டும்?

அடுத்த கட்டுரையில்
Show comments