Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தீபம் ஏற்றுவதற்கு எந்த எண்ணெய்களை பயன்படுத்தக் கூடாது.....?

Webdunia
தீபத்தில் மூன்று தேவிகள் இருக்கின்றார்கள். துர்கை, சரஸ்வதி, லட்சமி மூன்று சக்தியும் தீபத்தில் இருப்பதால் இருளை அகற்றுகின்றது. தீப பூஜை செய்வதால் மனதில் தோன்றும் குழப்பங்களைப் போக்கி உள்ளத்தின் இருளை போக்குகிறது.
தீபம் ஏற்றும்போது நெய், வேப்ப எண்ணெய், தேங்காய் எண்ணெய், விளக்கெண்ணெய் சேர்ந்து ஏற்றினால் தேவியின் அருள் கிட்டும். நெய் தீபம் ஏற்றினால் சகலவித மகிழ்ச்சி வீட்டில் ஏற்படும். நல்லெண்ணெய் கொண்டு தீபம் ஏற்றினால் உள்ள பீடை, தோஷம் யாவும் நீங்கிவிடும்.  விளக்கெண்ணெய் கொண்டு தீபம் ஏற்றினால் பெயர், புகழ், கீர்த்தி உண்டாகும்.
 
வேப்ப எண்ணெய், இலுப்பை எண்ணெய், நெய் மூன்றும் கலந்து தீப, ஏற்றினால் வீட்டில் செல்வ சேர்க்கை உண்டாகும். வறுமை நீங்கி சகல  செல்வங்களும் கிடைக்கும்.
 
பசு நெய்யால் தீபம் ஏற்றினால் கணவன் மனைவிக்குள் ஒற்றுமை ஏற்படும் மற்றும் குடும்பத்தில் நிலவுகின்ற பிரச்சனைகள் தீரும். குலதெய்வத்தின் அருளைப் பெற ஆமணக்கு எண்ணெய் கொண்டு தீபம் ஏற்றலாம். குலத்தை காக்கும் குலதெய்வ வழிபாடு செய்வது மிகவும்  நன்மை தரும்.
 
தீபம் ஏற்ற வேண்டிய திசைகள்:
 
கிழக்கு நோக்கி விளக்கேற்றினால் கிரக தோஷம் ஏற்படாது. வீட்டில் உள்ள சோதனைகள் மற்றும் துன்பங்கள் யாவும் படிப்படியாக குறைய  தொடங்கும்.
 
மேற்கு திசையில் விளக்கேற்றினால் சனிப்பீடை, கடன் தொல்லைகளில் இருந்து விடுதலை பெறலாம். பங்காளி பகை, சண்டை, சச்சரவு,  கிரகங்களின் தோஷம் நிவர்த்தியாகும்.
 
வடக்கு திசை நோக்கி தீபம் ஏற்றினால் கல்வியில் தடை விலகும், செல்வம் பெருகும், திருமண தடை நீங்கள், வியாபாரத்தில் லாபம் பெருகும். தெற்கு திசை நோக்கி தீபம் ஏற்றுவதை தவிர்த்திட வேண்டும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாம் லக்ஷ்மி கடாக்ஷத்துடன் வாழ சில மந்திரங்கள்...!

மூலாதாரக் குண்டலினி; வள்ளலார் அருளுரை

கணவன் மனைவி உறவை மேம்படுத்தும் குபேர மூலை!

வாஸ்து - மேல் நிலை நீர்த் தேக்கத் தொட்டி அமைக்கும் முறை..

வாஸ்து படி வீட்டிற்கு எத்தனை வாசல் இருக்க வேண்டும்?

அடுத்த கட்டுரையில்