சக்தி என்ற சொல் பராசக்தியையே குறிக்கும். சிவன் அனைத்து உயிரினங்களின் உடலில் கலந்து நிற்க அந்த உயிரினங்களுக்கு உயிரினை தருபவள் சக்தியே. பராசக்தியின் வடிவங்கள் பலப்பல.
ஒவ்வொரு காலத்திலும் ஒவ்வொரு சக்தி வடிவமாக பராசக்தி விளங்குகிறாள். அன்னை பராசக்தியே இந்த உலகத்தின் ஒவ்வொரு அணுவிலும் கலந்து நின்று உலக இயக்கத்தினை உருவாக்குகிறாள்.
சக்தியை வழிபடும் சாக்த மதத்தில் கடைப்பிடிக்கப்படும் விரதங்களில் முதன்மையானது ஒன்பது இரவுகள் உபவாசம் இருந்து அழிபடும் நவராத்திரி விரதமாகும்.