Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரோஹித் எனக்கு ஆதரவாக இருப்பார் என நம்புகிறேன்… மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா!

Webdunia
செவ்வாய், 19 மார்ச் 2024 (07:31 IST)
ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு கேப்டனாக செயல்பட்டு வந்த ஹர்திக் பாண்ட்யா, இப்போது மும்பை இந்தியன்ஸ் அணியால் மீண்டும் டிரேடிங் முறையில் வாங்கப்பட்டு அந்த அணிக்கு கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.  ஐபிஎல் தொடரின் வெற்றிகரமான கேப்டன்களில் ஒருவரான ரோஹித் ஷர்மாவை மும்பை இந்தியன்ஸ் அணி நீக்கியது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஹர்திக் பாண்ட்யா மும்பை அணிக்கு கேப்டனாக்கப்பட்டது அந்த அணி ரசிகர்களுக்கே பலருக்கு பிடிக்கவில்லை. பலரும் மும்பை இந்தியன்ஸ் அணியை திட்டியும் விமர்சித்தும் சமூகவலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

இந்நிலையில் மும்பை அணியின் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா பேசுகையில் “ரசிகர்களின் உணர்சிகளை நான் புரிந்து கொள்கிறேன். ஆனால் என்னால் கட்டுப்படுத்த முடிந்ததை மட்டுமே என்னால் கையாளமுடியும். அவர்களின் உணர்ச்சிக்கு மதிப்பளித்து என் வேலையில் கவனம் செலுத்த விரும்புகிறேன். நான் என்னுடைய முழு கேரியரிலும் ரோஹித்தின் கேப்டன்சியில் விளையாடியுள்ளேன். இப்போது அவர் எனக்கு ஆதரவாக என் தோல் கைபோட்டு இருப்பார் என நம்புகிறேன்” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2 ரன்கள் வித்தியாசத்தில் போராடி தோற்ற சிஎஸ்கே.. புள்ளிப்பட்டியலில் ஆர்சிபி முதலிடம்..!

டி 20 கிரிக்கெட்டில் அவர்களுக்காகதான் ஓய்வு பெற்றேன்.. மனம் திறந்த கோலி!

தோனி போன்றவர்கள் நூறு ஆண்டுகளுக்கு ஒருமுறைதான் பிறப்பார்கள்… ரெய்னா புகழாரம்!

காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதலினால் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ரத்து செய்யப்பட வாய்ப்பு

நடிகையின் புகைப்படங்களுக்கு விராட் கோலியின் லைக்... சர்ச்சைக்கு விளக்கம்!

அடுத்த கட்டுரையில்
Show comments