Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையில் ‘மஞ்சும்மெல் பாய்ஸ்’ படம் பார்த்த தல தோனி.. உடன் வந்தவர் இவரா?

Siva
ஞாயிறு, 24 மார்ச் 2024 (14:24 IST)
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர வீரர் தல தோனி தற்போது சென்னையில் தங்கியிருக்கும் நிலையில் சென்னை சத்யம் தியேட்டரில் ‘மஞ்சும்மெல் பாய்ஸ்’ படம் பார்த்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

ஐபிஎல் போட்டி தொடர் சமீபத்தில் ஆரம்பமான நிலையில் முதல் போட்டியில் பெங்களூரு அணியை சிஎஸ்கே அணி வீழ்த்தியது என்பது தெரிந்தது. இதனை அடுத்து அடுத்த போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை மற்றும் குஜராத் அணிகளுக்கு இடையே நடைபெற உள்ளது

வரும் 26ஆம் தேதி நடைபெற உள்ள இந்த போட்டிக்காக தோனி உட்பட சிஎஸ்கே வீரர்கள் தற்போது பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் சென்னை சத்யம் தியேட்டரில் ‘மஞ்சும்மெல் பாய்ஸ்’ படம் பார்க்க  தோனி வந்த நிலையில் அவருடன் தீபக் சஹார் வந்திருந்தார். இருவரும் படம் பார்த்து விட்டு வெளியே வந்த போது தோனியை பார்த்ததும் ரசிகர்கள் தோனி தோனி என்று கோஷமிட இது குறித்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

மலையாளத் திரைப்படமான ‘மஞ்சும்மெல் பாய்ஸ்’ சென்னை உள்பட தமிழகம் முழுவதும் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பது 200 கோடி வசூல் செய்து சூப்பர் ஹிட் ஆகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.,


Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஐபிஎல் மீண்டும் தொடங்கினாலும், மழை தொடங்கவிடவில்லை.. RCB - KKR போட்டி ரத்து

மழையால் பாதிக்கப்படுமா இன்றைய ஐபிஎல் போட்டி… முதல் அணியாக ப்ளே ஆஃப்க்கு செல்லும் RCB?

இந்த சீசனோடு ஓய்வா?... தோனி எடுத்த முடிவுதான்.. வெளியான தகவல்!

கோலியைக் கௌரவிக்கும் விதமாக RCB ரசிகர்கள் செயல்…! இன்றைய போட்டி முழுவதும் வெள்ளை ஜெர்ஸிதான்!

”RCBகிட்ட கப் இல்லைன்னு யார் சொன்னது?” ண்ணோவ்.. சும்மா இருண்ணா! - படிதார் பதிலுக்கு ரசிகர்கள் ரியாக்‌ஷன்!

அடுத்த கட்டுரையில்
Show comments