Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தோனி மகளுக்கு மிரட்டல் விடுத்த 16 வயது சிறுவன் கைது!

Webdunia
திங்கள், 12 அக்டோபர் 2020 (08:15 IST)
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தொடர் தோல்வியை பெற்று வருவதை அடுத்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு சமூக வலைதளங்கள் மூலம் மிரட்டல் வந்து கொண்டிருந்தது 
 
குறிப்பாக தோனியின் ஐந்து வயது மகளுக்கு பாலியல் மிரட்டல் வந்ததை அடுத்து தோனி வீட்டிற்கு பாதுகாப்பு ஏற்பாடுகளை ஜார்கண்ட் அரசு செய்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தோனியின் மனைவி சாக்ஷி தோனியின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அருவருக்கத்தக்க வகையில் கமெண்ட் பதிவு செய்த குஜராத்தை சேர்ந்த 16 வயது சிறுவன் தற்போது கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது 
 
இதுகுறித்து சாக்ஷி தோனி அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் அந்த கமெண்ட் செய்தவரின் விவரங்களை கண்டுபிடித்தனர். அப்போது அந்த நபர் 16 வயது சிறுவன் என்றும் தெரிந்ததை அடுத்து அவரை கைது செய்த போலீசார் அவரிடம் தீவிர விசாரணை செய்து வருகின்றனர் 
 
கொல்கத்தா அணிக்கு எதிராக சென்னை அணி தோல்வி அடைந்ததை அடுத்தே இந்த சிறுவன் தோனி மகளுக்கு மிரட்டல் விடுக்கும் வகையில் கமெண்ட்டை பதிவு செய்து இருந்தார் என்பது விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளது
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

”RCBகிட்ட கப் இல்லைன்னு யார் சொன்னது?” ண்ணோவ்.. சும்மா இருண்ணா! - படிதார் பதிலுக்கு ரசிகர்கள் ரியாக்‌ஷன்!

ஜடேஜாவைக் கேப்டனாக்குங்கள்… இளம் வீரர் வேண்டாம் -அஸ்வின் சொல்லும் காரணம்!

உலகின் பணக்கார விளையாட்டு வீரர்கள்! ரொனால்டோ முதலிடம்! - சொத்து மதிப்பு இவ்வளவு கோடியா?

கோலி ஓய்வு முடிவில் தெளிவாக இருந்தார்… என் கேள்விகளுக்கு தெளிவான பதில் சொன்னார் – மனம் திறந்த ரவி சாஸ்திரி!

ரோ-கோ இல்லாததால் பதற்றம் வேண்டாம்.. சிறிதுகாலத்தில் சரியாகி விடும் –சஞ்சய் மஞ்சரேக்கர் கருத்து!

அடுத்த கட்டுரையில்