Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கால்பந்து போட்டியில் இருந்து ஓய்வு? வதந்திக்கு ரொனால்டோ விளக்கம்

Webdunia
சனி, 23 செப்டம்பர் 2023 (17:42 IST)
கிறிஸ்டியனோ ரொனால்டோ தனது  ஓய்வு பற்றி வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

சர்வதேச கால்பந்து விளையாட்டின் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ. இவர்  போர்ச்சுக்கல் தேசிய அணிக்காக விளையாடி வரும்  நிலையில், அல் நாசர் அணியின் கிளப்புக்காக 200 மில்லியன் டாலர் என்ற அதிக தொகையில் ஒப்பந்தம் செய்யப்பட்டு விளையாடி வருகிறார்.

37 வயதாகும் ரொனால்டோ பிரபல வீரர் மற்றும் திறமையான ஆட்டக்காரர் என்பதால் உலகம் முழுவதும் பல லட்சம் ரசிகர்கள் அவரை பாலோ செய்து வருகின்றனர்.

இவர் இன்ஸ்டாவில் பதிவிடும் 1 பதிவுக்கு ரூ.26கோடி வருமானம் வருவதாக தகவல் வெளியாகும் நிலையில், விளம்பரங்கள் மூலம் இவருக்கு வருமானம்  வருகிறது.

இந்த நிலையில்,.  ரொனால்டோ கால்பந்து விளையாட்டில் இருந்து ஓய்வு பெறவுள்ளதாக இணையதளத்தில் வதந்திகள்  பரவியதது.

இதுகுறித்து ரொனால்டோ விளக்கம் அளித்துள்ளளார். அதில், என் கால்கள் சொல்லும் வரை நான் கால்பந்து விளையாடுவேன். என்னிடம் நிறைய உள்ளது. இன்னும் அதிக கோல்கள் அடிப்பதை நான் விரும்புகிறேன்.  நான்   விளையாடி முடித்துவிட்டேன் என்று கூறுகிறார்கள் அது உண்மையல்ல என்பதை போட்டியிகளின் மூலம் நிருபித்து வருகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

ரொனால்டோவின் விளக்கத்தால் அவரது ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எங்கள் நாட்டில் ஐபிஎல் போட்டியை நடத்த வாருங்கள்: இங்கிலாந்து அழைப்பு..!

சொந்த நாட்டிற்கு புறப்படத் தொடங்கிய கிரிக்கெட் வீரர்கள்! ஐபிஎல் அவ்வளவுதானா?

பாகிஸ்தான் ப்ரீமியர் லீகா? ஐபிஎல்லா? அரபு அமீரகம் எடுக்கப் போகும் அதிரடி முடிவு!

ஐபிஎல் தொடரை ஒரு வாரத்துக்கு தள்ளிவைக்கிறோம்… பிசிசிஐ அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

“இராணுவ வீரர்களுக்குத் துணை நிற்போம்..” விராட் கோலி பதிவு!

அடுத்த கட்டுரையில்
Show comments