Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அஸ்வினுக்கு ஆதரவாக தமிழக கிரிக்கெட் வீரர்!

Webdunia
செவ்வாய், 8 ஜூன் 2021 (11:57 IST)
சஞ்சய் மஞ்சரேக்கர் அஸ்வின் பற்றி சொன்ன கருத்துக்கு தமிழக வீரர் அபினவ் முகுந்த் மறுப்பு தெரிவித்துள்ளார்.

இந்திய அணியின் முன்னாள் பேட்ஸ்மேனும் தற்போதைய வர்ணனையாளருமான சஞ்சய் மஞ்சரேக்கர் சர்ச்சைகளுக்குப் பெயர் போனவர். ஏற்கனவே ரவிந்தர ஜடேஜா குறித்து அவர் பேசியது சர்ச்சைகளைக் கிளப்பிய நிலையில் இப்போது ரவிச்சந்திரன் அஸ்வின் குறித்து பேசியுள்ளார். இந்திய அணியின் முன்னாள் பேட்ஸ்மேனும் தற்போதைய வர்ணனையாளருமான சஞ்சய் மஞ்சரேக்கர் சர்ச்சைகளுக்குப் பெயர் போனவர். ஏற்கனவே ரவிந்தர ஜடேஜா குறித்து அவர் பேசியது சர்ச்சைகளைக் கிளப்பிய நிலையில் இப்போது ரவிச்சந்திரன் அஸ்வின் குறித்து பேசியுள்ளார்.

இதுபோன்ற கருத்துகளை அவர் அடிக்கடி கூறி வருவதால் அவரின் இந்த கருத்து பலராலும் கேலி செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் அவருக்கு நேரடியாக பதில் சொல்லாமல் மீம் ஒன்றின் மூலம் நக்கலாக பதிலளித்துள்ளார் அஸ்வின். அந்நியன் படத்தில் விக்ரம் விவேக்கிடம் ‘அப்படி சொல்லாதடா சாரி… மனசு வலிக்கிறது’ என்று அப்பாவியாக கூறுவதை மீமாக பகிர்ந்துள்ளார். அஸ்வினின் இந்த டிவீட் பலராலும் ரசிக்கப்பட்டு வருகிறது.

இதையடுத்து இப்போது அஸ்வினுக்கு ஆதரவாக அபினவ் முகுந்த் ‘அஸ்வின் கிரிக்கெட்டை நேசித்து ஆராய்ச்சி செய்து பந்து வீசுகிறார். ஒவ்வொரு ஆட்டத்துக்கு முன்பும் அவர் தன்னை சிறப்பாக தயார்படுத்திக் கொள்வார். அஸ்வின் அபாரமான ஒரு பவுலர். லெஜண்ட். அவரை பற்றிய சஞ்சய் மஞ்சரேக்கரின் கருத்தை மரியாதையுடன் மறுக்கிறேன்’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஏப்ரல் மாதத் தொடக்கத்திலேயே கோலி முடிவைக் கூறிவிட்டார்… அஜித் அகார்கர் தகவல்!

அனைத்து போட்டிகளிலும் பும்ரா விளையாடுவது சந்தேகம்… அகார்கர் தகவல்!

இந்திய டெஸ்ட் அணிக்கு புதிய கேப்டன் … இங்கிலாந்து தொடருக்கான அணி அறிவிப்பு!

ஒரு அணிக்காக அதிக பவுண்டரிகள்… கிங் கோலி படைத்த புதிய சாதனை!

‘சில நேரங்களில் தோல்வியும் நல்லதுதான்’… ஆர் சி பி கேப்டன் ஜிதேஷ் ஷர்மா!

அடுத்த கட்டுரையில்
Show comments