சையத் முஷ்டாக் அலி டி20 தொடரில் பஞ்சாப் அணியின் கேப்டன் அபிஷேக் சர்மா, பெங்கால் அணிக்கு எதிராக விளையாடியபோது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி சாதனை படைத்தார்.
இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணிக்கு, தொடக்க வீரர்களான அபிஷேக் சர்மா - பிரப்சிம்ரன் கூட்டணி 205 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து வலுவான அடித்தளமிட்டது. பிரப்சிம்ரன் 70 ரன்களில் ஆட்டமிழந்தாலும், கேப்டன் அபிஷேக் சர்மா அதிரடியை தொடர்ந்தார்.
அவர் வெறும் 12 பந்துகளில் அரைசதம் கடந்ததோடு, 32 பந்துகளில் சதம் அடித்து டி20 கிரிக்கெட்டில் அதிவேக சதத்தை பதிவு செய்தார்.
அபிஷேக் சர்மாவின் இந்த அதிரடி ஆட்டம், சையத் முஷ்டாக் அலி கோப்பை வரலாற்றில் மட்டுமின்றி, ஒட்டுமொத்த டி20 கிரிக்கெட்டிலும் ஒரு மிரட்டலான சாதனையாக பார்க்கப்படுகிறது.