Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உலகக்கோப்பை கிரிக்கெட்: மழையினால் இன்றைய போட்டியும் பாதிப்பு, அதிர்ச்சியில் ரசிகர்கள்

Webdunia
சனி, 15 ஜூன் 2019 (21:09 IST)
உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் அணிகள் பெற்றுள்ள புள்ளிகளை விட வருணபகவான் பெற்றுள்ள புள்ளிகளே அதிகம் இருப்பதால் கிரிக்கெட் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
 
இந்த நிலையில் இன்று உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இரண்டு ஆட்டங்கள் நடைபெற்று வருகிறது. ஒன்று இலங்கை மற்றும் ஆஸ்திரேலியா போட்டி லண்டனிலும் இன்னொன்று ஆப்கானிஸ்தான் மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான போட்டி கார்டிஃப் நகரில் நடைபெற்று வருகிறது
 
இதில் ஆப்கானிஸ்தான் மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான போட்டி மழை காரணமாக பாதியில் நிறுத்தப்பட்டது. முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 69 ரன்கள் எடுத்திருந்த நிலையில் மழை குறுக்கிட்டதால் ஆட்டம் நிறுத்தப்பட்டது. இதனால் கிரிக்கெட் ரசிகர்கள் குறிப்பாக தென்னாப்பிரிக்கா ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
 
ஆனால் நல்லவேளையாக மழை சிறிது நேரத்தில் நின்றுவிட்டதால் தற்போது 48 ஓவர்கள் போட்டியாக மாற்றப்பட்டு மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. சற்றுமுன் வரை ஆப்கானிஸ்தான் 21 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 69 ரன்கள் எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

செஸ் ஒலிம்பியாடில் தங்கம் வென்ற சிங்கங்கள்! ஹங்கேரியில் வரலாறு படைத்தது இந்தியா!

ஹண்ட்டர் வண்ட்டார்.. சூடுடா! டெஸ்ட் கிரிக்கெட்டில் அஸ்வின் படைத்த சாதனைகள்!

அதிரடி சரவெடி; முதல் டெஸ்ட்டில் அபாரமான வெற்றி பெற்ற இந்திய அணி!

செஸ் ஒலிம்பியாட்: 10 சுற்று முடிவில் தொடர்ந்து முதல் இடத்தில் இந்தியா! தங்கம் வெல்லுமா?

வங்கதேச அணிக்கு 515 ரன்கள் இலக்கு..! வெற்றியை நோக்கி இந்தியா.!!

அடுத்த கட்டுரையில்
Show comments