Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உலகக்கோப்பை வரை அம்பாத்தி ராயுடுதான் –விராட் கோஹ்லி

Webdunia
செவ்வாய், 30 அக்டோபர் 2018 (09:23 IST)
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான நேற்று நடைபெற்ற நான்காவது ஒருநாள் போட்டியில் இந்தியா 224 ரன்கள் வித்தியாசத்தில் அபாரமான வெற்றிபெற்றது.

யுவராஜ் சிங்கின் ஃபார்ம் அவுட்டுக்குப் பின் ஒருநாள் போட்டிகளில் 4-வது வீரராகக் களமிறங்க சரியான வீரர்கள் இன்றி இந்திய அணி தவித்து வந்தது. அஜிங்க்யா ரஹானே, மனீஷ் பாண்டே, கேதார் ஜாதவ் எனப் பல வீரர்களை களமிறக்கிப் பரிசோதித்தது. எல்லோருமே திறமையான வீரர்கள் என்றாலும் தொடர்ச்சியாக ரன் குவிக்காமல் அனைவரும் தடுமாறி வந்தனர்.

கேதார் ஜாதவ் ஆறாவது வீரராக விளையாடும் போது சிறப்பாக விளையாடி ரன்குவித்து வருகிறார். ரஹானே டெஸ்ட் போட்டிகள் போல ஒருநாள் போட்டிகளில் சிறப்பாக விளையாட முடியாமல் தவித்து வருகிறார். மனீஷ் பாண்டே தொடர்ந்து சொதப்பி அணித்தேர்வில் இருந்தே நீக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் இந்தாண்டு ஐபிஎல் போட்டிகளில் சிறப்பாக விளையாடியதன் மூலம் 2 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இந்திய அணிக்கு திரும்பிய அம்பாத்தி ராயுடுவை கோஹ்லி நான்காவது வீரராகக் களமிறக்கி பரிசோதித்துப் பார்த்தார்.

இந்த ஆண்டு நடைபெற்ற ஆசியக்கோப்பை மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அனிக்கெதிரான ஒருநாள் போட்டிகளில் 4வது வீரராக களமிறங்கி சிறப்பாக விளையாடி வரும் அம்பாத்தி ராயுடு 8 போட்டிகளில் 397 ரன்கள் சேர்த்துள்ளார். இதன் மூலம் அணியில் தனக்கான இடத்தை அவர் தக்கவைத்துக்கொண்டுள்ளார்.

நேற்றையப் போட்டியில் சிறப்பாக விளையாடி சதமடித்த ராயுடுவைப் பற்றி கேப்டன் கோஹ்லி தெரிவித்துள்ளாதவது ‘ராயுடு தனக்குக் கொடுக்கப்பட்ட வாய்ப்பை இரணடு கைகளாலும் பிடித்துக் கொண்டுள்ளார். அவர் ஆட்டத்தின் போக்கை உணர்ந்து விளையாடுகிறார். அவரை உலகக்கோப்பை வரை விளையாடவைத்து அவருக்கு தன்னம்பிக்கையைக் கொடுக்க வேண்டுமென நினைத்தோம். அவரைப் போன்ற புத்திசாலியான ஒருவர் நான்காவது வீரராக விளையாடுவது அணிக்குப் பலமே’.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை அணியைப் பாருங்க.. அதுதான் வீரர்களுக்கு வேண்டும் – லக்னோ அணி உரிமையாளரை சீண்டிய ராகுல்!

நானும் கோலியும் அந்த போட்டியில் செய்த தவறு குறித்து இன்னமும் பேசிக்கொண்டிருக்கிறோம்- மனம் திறந்த ராகுல்!

‘ஏன் அவரு இவ்ளோ கோபப்படுறாரு?.. நான் சொன்னத கோலியே ஒத்துப்பாரு’- சாந்தமாக பதில் கொடுத்த பாண்டிங்!

டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் பவுலிங் பயிற்சியாளராக முன்னாள் இந்திய வீரர்!

சுதந்திரமாக விளையாடும் அணியே தேவை.. LSG அணிக்குப் பதிலடி கொடுத்த கே எல் ராகுல்!

அடுத்த கட்டுரையில்
Show comments