Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அவர்களை நீக்கினால் கோலியையும்தான் நீக்கவேண்டும்…. ஆஷிஷ் நெஹ்ரா!

Webdunia
செவ்வாய், 4 ஜனவரி 2022 (15:17 IST)
இந்திய டெஸ்ட் அணியின் மூத்த வீரர்களான கோலி, புஜாரா மற்றும் ரஹானே ஆகிய மூவரும் கடந்த இரண்டு வருடங்களாக சொதப்பி வருகின்றனர்.

நியுசிலாந்து தொடருக்கு பின்னரே ரஹானே மற்றும் புஜாரா ஆகிய இருவரையும் நீக்கவேண்டும் என்று குரல்கள் எழுந்தன. ஆனால் கேப்டன் கோலி மற்றும் டிராவிட் ஆதரவால் இருவரும் தென் ஆப்பிரிக்கா தொடருக்கு சேர்க்கப்பட்டனர். ஆனாலும் அவர்கள் அந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளாமல் சொதப்பி வருகின்றனர்.

இதையடுத்து இப்போது மறுபடியும் அந்த குரல்கள் எழ ஆரம்பித்துள்ளன. இதுபற்றி பேசியுள்ள ஆஷிஷ் நெஹ்ரா ‘புஜாரா மற்றும் ரஹானேவை நீக்கவேண்டும் என்று சொல்பவர்கள் ஏன் அதே பார்மில் இருக்கும் கோலியைப் பற்றி பேசுவதில்லை. ஏனென்றால் அவர் அணியின் கேப்டன். மேலும் அவர் இவர்களுக்கு மேலாக எதையோ செய்துள்ளதாக நம்புகின்றனர். அதே போல மற்ற இருவரும் கூட அணிக்காக பங்களித்துள்ளனர். அவர்கள் இப்போது அணிக்கு சிக்கலாக இருக்கிறார்கள் என்பதை மறுக்கவில்லை. ஆனால் தொடரின் இடையில் இரு மூத்த வீரர்களை நீக்குவது நல்ல பயனை தராது’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மளமளவென விழுகும் இந்திய விக்கெட்டுக்கள்.. 2ஆம் நாள் முடிவில் ஸ்கோர் என்ன?

வங்கதேசத்தின் பேட்டிங் வரிசையை சிதைத்த பும்ரா.. 149 ரன்களில் ஆல் அவுட்.

உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் அவுட் ஆனதும் அதை நினைத்துதான் வருந்தினேன்… மனம் திறந்த கம்பீர்

அஸ்வின் , ஜடேஜா போல எந்த அணியிலும் ஆல்ரவுண்டர்கள் இல்லை… அஸ்வின் புகழாரம்!

டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் யாரும் படைக்காத சாதனை… ஜெய்ஸ்வால் எட்டிய மைல்கல்!

அடுத்த கட்டுரையில்
Show comments