Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இங்கிலாந்து அணி வெற்றிக்கு 482 ரன்கள் இலக்கு!

Webdunia
திங்கள், 15 பிப்ரவரி 2021 (15:44 IST)
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணிக்கு வெற்றி இலக்காக 482 ரன்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி ஆதிக்கம் செலுத்தி வருகிறது. நேற்று இங்கிலாந்து அணியை 134 ரன்களுக்கு ஆல் அவுட் செய்தது. சிறப்பாக பந்துவீசிய அஸ்வின்  5 விக்கெட்களை வீழ்த்தினார்.

முதல் இன்னிங்ஸில் 190 ரன்கள் முன்னிலை பெற்ற இந்திய அணி அதன் பின்னர் தனது இரண்டாம் இன்னிங்ஸை தொடர்ந்து ஆடியது. நேற்று ஒரு விக்கெட் இழப்போடு முடிந்த ஆட்டம் இன்று தொடங்கியது. ஆனால் ஆரம்பமே அதிர்ச்சி அளிக்கும் விதமாக அடுத்தடுத்து விக்கெட்களை இழந்து தடுமாறியது. ஆனால் கேப்டன் கோலியும் அஸ்வினும் நிலைத்து நின்று விளையாடி அணியை சரிவில் இருந்து மீட்டனர். ஒரு கட்டத்தில் கோலி அரைசதம் அடித்து அவ்ட் ஆனாலும், மறுமுனையில் சிறப்பாக விளையாடிய அஸ்வின், சதமடித்து அசத்தினார்.

இதனால் இந்திய அணி 277 ரன்கள் சேர்த்து அனைத்து விக்கெட்களையும் இழந்தது. ஏற்கனவே பெற்ற முன்னிலையோடு இந்திய அணி இப்போது இங்கிலாந்துக்கு 481 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஹண்ட்டர் வண்ட்டார்.. சூடுடா! டெஸ்ட் கிரிக்கெட்டில் அஸ்வின் படைத்த சாதனைகள்!

அதிரடி சரவெடி; முதல் டெஸ்ட்டில் அபாரமான வெற்றி பெற்ற இந்திய அணி!

செஸ் ஒலிம்பியாட்: 10 சுற்று முடிவில் தொடர்ந்து முதல் இடத்தில் இந்தியா! தங்கம் வெல்லுமா?

வங்கதேச அணிக்கு 515 ரன்கள் இலக்கு..! வெற்றியை நோக்கி இந்தியா.!!

ரிஷப் பண்ட் சதம், சதத்தை நெருங்கும் சுப்மன் கில்.. சென்னை டெஸ்ட் ஸ்கோர் விபர்ம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments