Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முதல் ஒருநாள் போட்டி – வெஸ்ட் இண்டீஸை ஊதித் தள்ளிய ஆஸி!

Webdunia
புதன், 21 ஜூலை 2021 (16:20 IST)
ஆஸ்திரேலியா ஒரு நாள் மற்றும் டி 20 அணி வெஸ்ட் இண்டீஸுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. அங்கு 5 டி 20 போட்டிகளில் விளையாடி முடித்த நிலையில் இப்போது ஒருநாள் போட்டி தொடங்கியுள்ளது. இதையடுத்து பார்படாஸில் நடந்த முதல் போட்டியில் டாஸ் வென்ற ஆஸி அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து ஆடியது.

அந்த அணியின் தற்காலிக கேப்டன் அலெக்ஸ் கேரி மட்டும் நிலைத்து நின்று ஆடி அரைசதம் அடித்தார். மற்ற வீரர்கள் பெரிய அளவில் பங்களிப்பு செய்யாததால் 49 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 252 ரன்கள் சேர்த்தது. அதன் பின்னர் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி வெறும் 123 ரன்கள் மட்டுமே சேர்த்து அனைத்து விக்கெட்களையும் இழந்தது.
அந்த அணியின் கேப்டம் பொல்லார்ட் மட்டும் 56 ரன்கள் சேர்த்தார். ஆஸி அணியின் வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் அபாரமாக பந்துவீசி 5 விக்கெட்களை வீழ்த்தினார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை அணியைப் பாருங்க.. அதுதான் வீரர்களுக்கு வேண்டும் – லக்னோ அணி உரிமையாளரை சீண்டிய ராகுல்!

நானும் கோலியும் அந்த போட்டியில் செய்த தவறு குறித்து இன்னமும் பேசிக்கொண்டிருக்கிறோம்- மனம் திறந்த ராகுல்!

‘ஏன் அவரு இவ்ளோ கோபப்படுறாரு?.. நான் சொன்னத கோலியே ஒத்துப்பாரு’- சாந்தமாக பதில் கொடுத்த பாண்டிங்!

டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் பவுலிங் பயிற்சியாளராக முன்னாள் இந்திய வீரர்!

சுதந்திரமாக விளையாடும் அணியே தேவை.. LSG அணிக்குப் பதிலடி கொடுத்த கே எல் ராகுல்!

அடுத்த கட்டுரையில்
Show comments