Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காமன்வெல்த் போட்டி நிறைவடைந்தது: இந்தியாவுக்கு 3-வது இடம்

Webdunia
திங்கள், 16 ஏப்ரல் 2018 (12:06 IST)
கோல்டு கோஸ்ட் நகரில் நடைபெற்று வந்த 21-வது காமன்வெல்த் போட்டிகள் நேற்று கோலகலமாக நிறைவடைந்தது. இதில் இந்தியா 66 பதக்கங்களை வென்று 3-வது இடத்தை பிடித்தது.

 
ஆஸ்திரேலியாவில் உள்ள கோல்டு கோஸ்ட் நகரில் 21-வது காமன்வெல்த் போட்டி கார்ரா ஸ்டேடியத்தில் நேற்று மாலை கோலகலமாக நிறைவடைந்தது. கடந்த 4-ம் தேதி தொடங்ங்கிய இந்த போட்டிகளில் ஆஸ்திரேலியா, இந்தியா, கனடா, பாகிஸ்தான், இங்கிலாந்து உள்பட 71 நாடுகளில் இருந்து சுமார் 4500 வீரர்-வீராங்கனைகள் பங்கேற்றன. இந்தியா சார்பில் 14 விளையாட்டுகளில் 219 வீரர்- வீராங்கனைகள் களம் இறங்கினர்.
 
இதில் அதிகபட்சமாக ஆஸ்திரேலியா 80 தங்கம், 59 வெள்ளி, 59 வெண்கலம் என மொத்தம் 198 பதக்கங்களுடன் முதலிடத்தைப் பிடித்தது. இங்கிலாந்து 45 தங்கம், 45 வெள்ளி, 46 வெண்கலம் என மொத்தம் 136 பதக்கங்களுடன் 2-ம் இடத்தைப் பெற்றது. இந்தியா 26 தங்கம், 20 வெள்ளி, 20 வெண்கலம் என மொத்தம் 66 பதக்கங்களுடன் 3-வது இடத்தை பிடித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை அணியைப் பாருங்க.. அதுதான் வீரர்களுக்கு வேண்டும் – லக்னோ அணி உரிமையாளரை சீண்டிய ராகுல்!

நானும் கோலியும் அந்த போட்டியில் செய்த தவறு குறித்து இன்னமும் பேசிக்கொண்டிருக்கிறோம்- மனம் திறந்த ராகுல்!

‘ஏன் அவரு இவ்ளோ கோபப்படுறாரு?.. நான் சொன்னத கோலியே ஒத்துப்பாரு’- சாந்தமாக பதில் கொடுத்த பாண்டிங்!

டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் பவுலிங் பயிற்சியாளராக முன்னாள் இந்திய வீரர்!

சுதந்திரமாக விளையாடும் அணியே தேவை.. LSG அணிக்குப் பதிலடி கொடுத்த கே எல் ராகுல்!

அடுத்த கட்டுரையில்
Show comments