Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தனி ஒருவனாய் சென்னை வெற்றிக்கு போராடிய டுபிளஸ்சிஸ்

Webdunia
செவ்வாய், 22 மே 2018 (22:50 IST)
இன்று நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் பிளே ஆஃப் சுற்றில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐதராபாத் அணியை 2 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி நேரடியாக இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது.
 
இன்றைய போட்டியில் 140 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய சென்னை அணிக்கு ஆரம்பம் முதலே அதிர்ச்சி மேல் அதிர்ச்சி காத்திருந்தது. சென்னை அணியின் முன்னணி பேட்ஸ்மேன்களான வாட்சன், ராயுடு, தோனி, பிராவோ, ஜடேஜா, ஆகியோர் ஒற்றை இலக்கங்களில் தங்கள் விக்கெட்டை பறிகொடுத்தனர்.
 
சென்னை அணி ஒரு கட்டத்தில் 6 விக்கெட்டுக்களை 62 ரன்களுக்கு பறிகொடுத்து தத்தளித்தது. ஆனால் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய டுபிளஸ்சிஸ் தனி ஒருவனாக போராடி வெற்றிக்கு வித்திட்டார். அவர் 42 பந்துகளில் 62 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் சென்னையை வெற்றிப்பாதைக்கு அழைத்து சென்றார். இறுதியில் சென்னை அணி 19.1 ஓவரில் 8 விக்கெட்டுக்களை இழந்து 140 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. 
 
இந்த வெற்றியால் சென்னை அணி வரும் 27ஆம் தேதி நடைபெறும் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது. ஐதராபாத் அணிக்கு இறுதி போட்டிக்கு செல்ல இன்னும் ஒரு வாய்ப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை அணியைப் பாருங்க.. அதுதான் வீரர்களுக்கு வேண்டும் – லக்னோ அணி உரிமையாளரை சீண்டிய ராகுல்!

நானும் கோலியும் அந்த போட்டியில் செய்த தவறு குறித்து இன்னமும் பேசிக்கொண்டிருக்கிறோம்- மனம் திறந்த ராகுல்!

‘ஏன் அவரு இவ்ளோ கோபப்படுறாரு?.. நான் சொன்னத கோலியே ஒத்துப்பாரு’- சாந்தமாக பதில் கொடுத்த பாண்டிங்!

டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் பவுலிங் பயிற்சியாளராக முன்னாள் இந்திய வீரர்!

சுதந்திரமாக விளையாடும் அணியே தேவை.. LSG அணிக்குப் பதிலடி கொடுத்த கே எல் ராகுல்!

அடுத்த கட்டுரையில்
Show comments