Webdunia - Bharat's app for daily news and videos

Install App

10 முறை அணியை ஃபைனலுக்கு கொண்டு சென்ற ஒரே கேப்டன்: தோனிக்கு குவியும் வாழ்த்து..!

Webdunia
புதன், 24 மே 2023 (07:00 IST)
நேற்று சென்னை மற்றும் குஜராத் அணிகளுக்கு இடையே நடந்த குவாலிஃபயர் ஒன்று போட்டியில் சென்னை அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. இதனை அடுத்து ஐபிஎல் வரலாற்றில் 10 முறை இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்ற அணி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி என்ற பெருமை பெற்றதோடு 10 முறை ஒரு அணியை ஃபைனலுக்கு கொண்டு சென்ற ஒரே கேப்டன் என்ற பெருமையும் தோனிக்கு கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இதனை அடுத்து தோனிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. மேலும் குஜராத் அணியோடு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இதற்கு முன்பு மூன்று முறை மோதிய நிலையில் 3 போட்டிகளிலும் தோல்வி அடைந்தது. ஆனால் நேற்று வெற்றி பெற்று குஜராத் அணியை வீழ்த்தியதை அடித்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரசிகர்கள் மகிழ்ச்சியுள்ளனர். 
 
லீக் போட்டிகளில் வெற்றி பெற்று முதல் இடத்தை பெறுவது முக்கியமல்ல,  முதலில் ஃபைனலுக்கு யார் செல்வது என்பதுதான் முக்கியம் என்று நெட்டிசன்கள் சமூக வலைதளத்தில் சிஎஸ்கேவுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விதவிதமாய்… வித்தியாசமாய்… பேட்டும் பறக்குது பந்தும் பறக்குது. வைரல் ஆகும் ரிஷப் பண்ட்டின் விக்கெட்!

இது நீண்ட உறவின் தொடக்கம்… இளம் வீரர் குறித்து சென்னை அணிப் பயிற்சியாளர் கருத்து!

ஐ பி எல் தொடரில் முதல் ஆளாக அந்த சாதனையைப் படைத்த ரியான் பராக்!

பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டி.. டாஸ் வென்ற லக்னோ எடுத்த முடிவு.. ஆடும் லெவனில் யார் யார்?

கடைசி பந்தில் 23 ரன்கள் தேவை.. கொல்கத்தா அணி 1 ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி

அடுத்த கட்டுரையில்
Show comments