Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அதே டீம் அதே கெத்து.. சய்லெண்டாய் சாதித்த சிஎஸ்கே!

Webdunia
புதன், 19 டிசம்பர் 2018 (14:21 IST)
இளசுகளுக்கு ஐபிஎல் ஃபீவர் கூடிய விரைவில் தொற்றிக்கொள்ளும், ஏனெனில் ஐபிஎல் ஏலம் நல்லபடியாக நேற்று முடிந்தது. ஏதிர்ப்பார்க்காத வீரர்கள் கோடிக்கணக்கில் ஏலத்தில் எடுக்கப்பட்டனர். ஆனால், யுவராஜ் சிங் விலை மட்டுமே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. 

 
இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அசால்டாக சய்லெண்டாக அணிக்கு என்ன வேண்டுமோ அதை கச்சிதமாக எடுத்துக்கொண்டது. ஏலத்திற்கு முன்னர் சிஎஸ்கே ஏலத்திற்கே சென்றதே வீணானது என பேசப்பட்டது. 
 
காரணம், ஐபிஎல் ஏலத்தில் பங்கேற்கும் சென்னை அணியிடம் மற்ற அணிகளை விட மிக குறைவான பணம் மட்டுமே கையில் இருந்தது. இதனால், சென்னை அணி இரண்டு இந்திய வீரர்களை மட்டுமே எடுக்க முடியும். வெளிநாட்டு வீரர்களை ஏலத்தில் எடுக்க முடியாது என கூறப்பட்டது.
ஆனால், சென்னை அணியோ விமர்சனங்களை தாண்டி அதே கெத்து டீமை கைப்பற்றியது. மோஹித் சர்மாவை இந்த ஆண்டு அணிக்காக ஏலம் எடுத்தது. அதோடு, ருதுராஜ் கெய்க்வாட்டையும் ஏலத்தில் எடுத்தது. 
 
மீதமுள்ள வீரர்கள் வழக்கம்போல், கேப்டன் தோனி, ரெய்னா, ஜடேஜா, ஹர்பஜன் சிங், ப்ராவோ, வாட்சன், ராயுடு என மேலும் சிலர். கடந்த ஆண்டு ஐபிஎல் கோப்பையை வென்றது போல அதே டீமுடன் களமிறங்கும் சென்னை அணி கோப்பையை வெல்ல வேண்டும் என்பது ரசிகர்களில் எதிர்ப்பார்ப்பு. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

லுங்கி இங்கிடிக்குப் பதிலாக ஜிம்பாப்வே வீரரை ஒப்பந்தம் செய்த RCB!

டீம் வெற்றிக்கு கேப்டன்தான் காரணம்.. வெளில உட்காந்திருப்பவர் அல்ல! - கம்பீரை தாக்கிய கவாஸ்கர்!

ஆசிய கிரிக்கெட் தொடர்களில் இருந்து வெளியேற பிசிசிஐ முடிவு!

டி 20 போட்டிகளில் கோலியின் மற்றொரு சாதனையை முறியடித்த கே எல் ராகுல்!

உடல் எடையைக் குறைத்து விமர்சனங்களுக்குப் பதிலளித்த சர்பராஸ் கான்!

அடுத்த கட்டுரையில்
Show comments