Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாலியல் புகாரில் கைதான தனுஷ்கா குணதிலகா அணியில் இருந்து நீக்கமா?

Webdunia
திங்கள், 7 நவம்பர் 2022 (16:43 IST)
பாலியல் புகாரில் கைதான தனுஷ்கா குணதிலகா அணியில் இருந்து நீக்கமா?
பாலியல் புகார் காரணமாக ஆஸ்திரேலியா போலீசாரால் கைது செய்யப்பட்ட இலங்கை வீரர் தனுஷ்கா குணதிலகா இலங்கை அணியில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.
 
சமீபத்தில் உலக கோப்பை டி20 கிரிக்கெட் போட்டியில் கலந்து கொள்வதற்காக இலங்கை அணி ஆஸ்திரேலியா சென்ற நிலையில் அந்த அணியில் உள்ள ஆல்ரவுண்டர் வீரரான தனுஷ்கா குணதிலகா ஒரு பெண்ணிடம் அத்துமீறியதாக தெரிகிறது
 
இதனையடுத்து அளிக்கப்பட்ட புகாரில் அவர் கைது செய்யப்பட்டார். இந்த நிலையில் ஆஸ்திரேலியாவில் பாலியல் புகாரில் கைது செய்யப்பட்ட இலங்கை வீரர் தனுஷ்கா குணதிலகா அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளிலும் இருந்து தற்காலிகமாக நீக்கப்படுவதாக இலங்கை கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது
 
அவர் தான் குற்றவாளி இல்லை என நிரூபித்து நிரபராதியாக வெளிவந்தவுடன் தான் அவரை அணியில் சேர்ப்பது குறித்து பரிசீலிக்கப்படும் என கூறப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாகிஸ்தான் ப்ரீமியர் லீகா? ஐபிஎல்லா? அரபு அமீரகம் எடுக்கப் போகும் அதிரடி முடிவு!

ஐபிஎல் தொடரை ஒரு வாரத்துக்கு தள்ளிவைக்கிறோம்… பிசிசிஐ அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

“இராணுவ வீரர்களுக்குத் துணை நிற்போம்..” விராட் கோலி பதிவு!

“நாடுதான் முக்கியம்… மற்ற விஷயங்கள் எல்லாம்…” – ஐபிஎல் ஒத்திவைப்பு சம்மந்தமாக சிஎஸ்கே பதிவு!

ரோஹித் ஷர்மாவின் ஓய்வுக்கு பிசிசிஐ அழுத்தம்தான் காரணமா?... ராஜீவ் சுக்லா பதில்!

அடுத்த கட்டுரையில்