Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அணியில் இருந்து நீக்கப்பட்ட ஜோப்ரா ஆர்ச்சர் – என்ன காரணம்!

Webdunia
வெள்ளி, 17 ஜூலை 2020 (13:48 IST)
இங்கிலாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இருந்து வேகப்பந்து வீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சர் போட்டி தொடங்கும் சில மணிநேரங்களுக்கு முன்னதாக நீக்கப்பட்டார்.

இங்கிலாந்து சென்றுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதலில் சவுத்தாம்ப்டனில் நடந்த  முதல் டெஸ்ட்டில் இங்கிலாந்து அணி படுதோல்வி அடைந்தது. இதையடுத்து நேற்று இரண்டாவது டெஸ்ட் போட்டி தொடங்கியது. அதில் அதிர்ச்சியளிக்கும் விதமாக இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சர் நீக்கப்பட்டார்.

இது அனைவருக்கும் ஆச்சர்யம் அளிக்க அவர் கொரோனா கால விதிமுறைகளை மீறியதாலேயே அவர் நீக்கப்பட்டதாகவும், அவரை 5 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த 5 நாட்களில் அவருக்கு 2 முறை கொரோனா சோதனை மேற்கொள்ளப்படும் என்றும் அதில் நெகட்டிவ் என வந்தால் மட்டுமே அவர் அடுத்த போட்டியில் கலந்துகொள்ள முடியும் எனவும் சொல்லப்படுகிறது.
இது குறித்து ஜோப்ரா ஆர்ச்சர் மன்னிப்பும் கேட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாண்டிங் கோலிப் பற்றி கவலைப்படவேண்டாம்… அவர் வேலை அதுதான்… கம்பீர் நெத்தியடி பதில்!

சாம்பியன்ஸ் ட்ராபி விளையாட பாகிஸ்தானுக்கு செல்ல முடியாது… ஐசிசியிடம் தெரிவித்த பிசிசிஐ!

ரோஹித் விளையாட வரலைன்னா.. இவங்கதான் விளையாடுவாங்க! - கம்பீர் அதிரடி முடிவு!

இன்று பத்திரிக்கையாளர்களை சந்திக்கிறார் கம்பீர்… முக்கிய அறிவிப்பு வருமா?

இந்திய அணியோடு ஆஸ்திரேலியா செல்லாத ரோஹித் ஷர்மா.. முதல் டெஸ்ட்டில் பங்கேற்பாரா?

அடுத்த கட்டுரையில்
Show comments