Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பும்ரா, ஷமி அபாரம்.. 6 விக்கெட்டுகளை இழந்து தத்தளிக்கும் இங்கிலாந்து..!

Webdunia
ஞாயிறு, 29 அக்டோபர் 2023 (20:32 IST)
உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான போட்டி நடைபெற்று வரும் நிலையில் இந்தியா கிட்டத்தட்ட வெற்றியை நெருங்கி விட்டதாக கூறப்படுகிறது.

இன்றைய போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி  முதலில் பந்துவீச முடிவு எடுத்த நிலையில் இந்திய அணி பேட்டிங் செய்தது. தொடக்க ஆட்டக்காரராக கேப்டன் ரோகித் சர்மா அபாரமாக விளையாடி 87 ரன்கள் அடித்தாலும், கில், விராட் கோஹ்லி, ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் ஏமாற்றினர்.

இதனை அடுத்து கேஎல் ராகுல், சூரியகுமார் யாதவ் ஆகியோர் ஓரளவு அடித்ததை எடுத்து இந்தியா 50 ஓவர்களில் ஒன்பது விக்கெட்டுகளை இழந்து 229 ரன்கள் எடுத்தது. இதனை அடுத்து 230 என்ற எளிய இலக்கை நோக்கி இங்கிலாந்து அணி விளையாடிய நிலையில் அந்த அணி பும்ரா மற்றும் ஷமியின் பந்துவீச்சை தாக்கு பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து வருகிறது.  

ஜோ ரூட் மற்றும் பென் ஸ்டோக் ஆகியோர் டக் அவுட் ஆன நிலையில் பெயர்ஸ்டோ, டேவிட் மலான்,  கேப்டன் ஜாஸ் பட்லர், மொயின் அலி ஆகியோர் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து விட்டனர்

இந்த நிலையில் இங்கிலாந்து அணி 23 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து வெறும் 81 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளதால் இந்தியாவின் வெற்றி கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் சஞ்சு சாம்சனுக்கும் டிராவிட்டுக்கும் இடையில் மோதலா?

சிஎஸ்கே அணி வீரரின் தந்தை காலமானார்… ரசிகர்கள் அஞ்சலி!

உங்களை இந்திய ஜெர்ஸியில் பார்க்க ஆசைப்படுகிறேன்… சாய் சுதர்சனைப் பாராட்டிய சிவகார்த்திகேயன்!

போட்டியில் தோற்றால் கூட பார்ட்டி கேட்பார்கள்… வெளிநாட்டு வீரர்கள் குறித்து சேவாக் காட்டம்!

ஐதராபாத் மைதானத்தில் முகமது அசாரூதின் ஸ்டாண்ட் பெயர் மாற்றம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments