Webdunia - Bharat's app for daily news and videos

Install App

24.50 லட்சம் டிக்கெட்டுகள் விற்பனை; தீவிர எதிர்பார்ப்பில் ஃபிபா உலககோப்பை கால்பந்து!

Webdunia
வெள்ளி, 19 ஆகஸ்ட் 2022 (10:17 IST)
கத்தாரில் நடைபெற உள்ள ஃபிபா உலகக்கோப்பை கால்பந்து தொடருக்கு இதுவரை 24.50 லட்சம் டிக்கெட்டுகள் விற்பனையாகியுள்ளன.

நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் ஃபிபா உலகக்கோப்பை கால்பந்து போட்டி இந்த முறை கத்தாரில் நடைபெற உள்ளது. நவம்பர் 20ம் தேதி தொடங்கும் இந்த போட்டியில் 32 நாட்டு அணிகள் 8 பிரிவாக பிரிக்கப்பட்டு போட்டியிடுகின்றன.

பல்வேறு நாட்டு அணிகளும் கலந்து கொள்ளும் நிலையில் அந்தந்த நாடுகளை சேர்ந்த கால்பந்து ரசிகர்களும் கால்பந்து போட்டிகளை காணவும், தங்கள் நாட்டு அணியை உற்சாகப்படுத்தவும் கத்தார் வர திட்டமிட்டுள்ளனர்.

இந்நிலையில் ஃபிபா போட்டிகளுக்கான டிக்கெட்டுகள் இதுவரை 24.50 லட்சம் டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான டிக்கெட்டுகளை கத்தார், அமெரிக்கா, பிரிட்டன், பிரேசில், பிரான்ஸ், ஜெர்மனி மற்றும் அர்ஜெண்டினா நாடுகளை சேர்ந்த கால்பந்து ரசிகர்கள் வாங்கியுள்ளனர். அடுத்த சுற்று டிக்கெட்டுகள் விற்பனை தொடங்கும் தேதி செப்டம்பரில் அறிவிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாண்டிங் கோலிப் பற்றி கவலைப்படவேண்டாம்… அவர் வேலை அதுதான்… கம்பீர் நெத்தியடி பதில்!

சாம்பியன்ஸ் ட்ராபி விளையாட பாகிஸ்தானுக்கு செல்ல முடியாது… ஐசிசியிடம் தெரிவித்த பிசிசிஐ!

ரோஹித் விளையாட வரலைன்னா.. இவங்கதான் விளையாடுவாங்க! - கம்பீர் அதிரடி முடிவு!

இன்று பத்திரிக்கையாளர்களை சந்திக்கிறார் கம்பீர்… முக்கிய அறிவிப்பு வருமா?

இந்திய அணியோடு ஆஸ்திரேலியா செல்லாத ரோஹித் ஷர்மா.. முதல் டெஸ்ட்டில் பங்கேற்பாரா?

அடுத்த கட்டுரையில்
Show comments