Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனா விதிமுறைகளை மீறிய 5 இந்திய வீரர்கள் – இப்போது தனிமைப்படுத்துதலில்!

Webdunia
சனி, 2 ஜனவரி 2021 (17:53 IST)
ஆஸ்திரேலியாவில் உள்ள இந்திய வீரர்கள் புத்தாண்டைக் கொண்டாடுவதற்காக கொரோனா விதிமுறைகளை மீறி உள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே தற்போது டெஸ்ட் போட்டி தொடர் நடைபெற்று வரும் நிலையில் ஏற்கனவே நடைபெற்று முடிந்த இரண்டு டெஸ்ட் போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது . இந்த நிலையில் ஜனவரி 7ஆம் தேதி 3-வது டெஸ்ட் போட்டி தொடங்க உள்ள நிலையில் இந்திய அணியினர் 5 பேர் பயோ பபுளில் இருந்து வெளியேறி கொரோனா விதிமுறைகளை மீறியுள்ளனர்.

 துணைக் கேப்டன் ரோஹித் சர்மா, பிரித்வி ஷா, ரிஷப்பந்த், நவ்தீப் ஷைனி, சுப்மான் கில் புத்தாண்டை கொண்டாடுவதற்காக ஒரு ஹோட்டலுக்கு சென்று சாப்பிட்டுள்ளனர். அப்போது அங்கு வந்த ரசிகர் ஒருவர் அவர்களிடம் கைகுலுக்கி செல்பி எடுத்துள்ளார். மேலும் வீரர்களின் உணவுக்கு தானே பணமும் செலுத்தியுள்ளார். இது சம்மந்தமாக அவர் சமூகவலைதளத்தில் புகைப்படத்தை வெளியிட அது பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. இதையடுத்து அந்த ஐந்து வீரர்களும் இப்போது தனிமைப் படுத்தப்பட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சொந்த மைதானத்தில் அதிக முறை தோல்வி அடைந்த சீசன்.. சிஎஸ்கேவின் மோசமான சாதனை..!

எதிர்காலத்தில் சிஎஸ்கே அணியின் சொத்தாக அவர் இருப்பார்… இளம் வீரரைப் பாராட்டிய தோனி!

ஓய்வை அறிவிக்கப் போகிறாரா தோனி?... நேற்றைய போட்டியில் சூசக தகவல்!

உணர்ச்சிப் பெருக்கில் கண்ணீர் விட்ட’டூரிஸ்ட் பேமிலி’ பட இயக்குனர்!

போட்டியின் போக்கையே மாற்றிய சஹாலின் ஒரு ஓவர்…!

அடுத்த கட்டுரையில்
Show comments