Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தோல்வியால் அணியில் எந்த மாற்றமும் செய்ய வேண்டாம்; கங்குலி அறிவுரை

Webdunia
ஞாயிறு, 5 ஆகஸ்ட் 2018 (19:52 IST)
இங்கிலாந்து அண்இக்கு எதிரான முதல் போட்டியில் இந்திய தோல்வியடைந்தை அடுத்து அணி எந்த மாற்றமும் செய்ய வேண்டாம் என்று முன்னாள் கேப்டன் கங்குலி அறிவுரை கூறியுள்ளார்.

 
இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தற்போது டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்தது.
 
இதுகுறித்து முன்னாள் கேப்டன் கங்குலி கூறியதாவது:-
 
இந்திய அணி தோல்விக்கு கேப்டன் விராட் கோஹ்லியை குறை சொல்ல முடியாது. அணி வெற்றி பெற எல்லோரும் ரன் குவிக்க வேண்டும். முரளி, ரஹானே ஆகியோருக்கு இன்னொரு வாய்ப்பு வழங்க வேண்டும்.
 
முதல் போட்டியில் தோல்வி அடைந்ததால் அணியில் எந்த மாற்றமும் செய்ய வேண்டாம். அணியில் உள்ள வீரர்கள் பெரும்பாலும் எல்லா தரப்பு போட்டியிலும் விளையாட வேண்டும்.
 
கேப்டன் அணி வீரர்களுடன் அமர்ந்து பேசி, அவர்களை எந்த பயமும் இல்லாமல் போய் விளையாடு என்று சொல்ல வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

லுங்கி இங்கிடிக்குப் பதிலாக ஜிம்பாப்வே வீரரை ஒப்பந்தம் செய்த RCB!

டீம் வெற்றிக்கு கேப்டன்தான் காரணம்.. வெளில உட்காந்திருப்பவர் அல்ல! - கம்பீரை தாக்கிய கவாஸ்கர்!

ஆசிய கிரிக்கெட் தொடர்களில் இருந்து வெளியேற பிசிசிஐ முடிவு!

டி 20 போட்டிகளில் கோலியின் மற்றொரு சாதனையை முறியடித்த கே எல் ராகுல்!

உடல் எடையைக் குறைத்து விமர்சனங்களுக்குப் பதிலளித்த சர்பராஸ் கான்!

அடுத்த கட்டுரையில்
Show comments