Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இங்கிலாந்துக்கு செல்லாத கங்குலி ! பிசிசிஐ தகவல்!

Webdunia
புதன், 2 ஜூன் 2021 (11:47 IST)
இங்கிலாந்தில் நடக்க உள்ள உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியைக் காண பிசிசிஐ தலைவர் கங்குலி செல்லவில்லை.

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான  5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் ஜூன் ஆகஸ்ட் மாதம் தொடங்க உள்ளது. இந்த தொடர் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் இங்கிலாந்துக்கு நாளை இந்திய வீரர்கள் தனி விமானம் மூலமாக செல்ல உள்ளனர். இங்கிலாந்தில் கிட்டத்தட்ட நான்கு மாதங்கள் இருக்க வேண்டி இருப்பதால் தங்கள் குடும்பத்தினரை அழைத்து செல்ல அனுமதி கோரி விண்ணப்பித்தனர். அதற்கு பிசிசிஐயும் சம்மதித்துள்ளது. இந்நிலையில் அனைத்து வீரர்களும் நாளை குடும்பத்தினருடன் சவுத்தாம்ப்டனுக்கு சென்று அங்குள்ள ஓட்டலில் 14 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ள உள்ளனர்.

இந்நிலையில் பிசிசிஐ வெளியிட்டுள்ள அறிவிப்பில் ‘வீரர்களை குடும்பத்தினரோடு வருவதற்கு பிரிட்டன் அரசுக்கு நன்றி. அது வீரர்களின் மனநிலையை மேம்படுத்த உதவும். தனிமைப்படுத்திக் கொள்ளும் நாட்கள் அதிகமாக உள்ளதால் பிசிசிஐ தலைவர் கங்குலி மற்றும் செயலாளர் ஜெய் ஷா ஆகியோர் செல்லவில்லை’ எனக் கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஹண்ட்டர் வண்ட்டார்.. சூடுடா! டெஸ்ட் கிரிக்கெட்டில் அஸ்வின் படைத்த சாதனைகள்!

அதிரடி சரவெடி; முதல் டெஸ்ட்டில் அபாரமான வெற்றி பெற்ற இந்திய அணி!

செஸ் ஒலிம்பியாட்: 10 சுற்று முடிவில் தொடர்ந்து முதல் இடத்தில் இந்தியா! தங்கம் வெல்லுமா?

வங்கதேச அணிக்கு 515 ரன்கள் இலக்கு..! வெற்றியை நோக்கி இந்தியா.!!

ரிஷப் பண்ட் சதம், சதத்தை நெருங்கும் சுப்மன் கில்.. சென்னை டெஸ்ட் ஸ்கோர் விபர்ம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments