Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மன்கட்டிங் என சொல்லவேண்டாம்… புதிய பெயரை சூட்டிய கவாஸ்கர்!

Webdunia
வியாழன், 8 அக்டோபர் 2020 (16:13 IST)
ஐபிஎல் போட்டிகளில் மன்கட்டிங் முறையில் வீரர்களை அவுட் ஆக்குவது குறித்த சர்ச்சையை அஸ்வின் கிளப்பிவிட்டார்.

கடந்த ஆண்டு நடந்த 12 ஆவது ஐபிஎல் போட்டிகளின் பஞ்சாப் அணி வீரர் அஸ்வின் எதிரணி வீரர் ஜோஸ் பட்லரை அஸ்வின் மன்கட் முறையில் அவுட் ஆக்கியது கூறப்படுகிறது. மன்கட் முறையில் பேட்ஸ்மேனை எச்சரிக்காமல் முதல் முறையே அவுட் ஆக்கியது ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களால் கடுமையாக விமர்சனம் செய்யப்பட்டது.

இதையடுத்து அஸ்வின் இந்த குற்றச்சாட்டுகளுக்குப் பதில் அளிக்கும் விதமாக அஸ்வின் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்துள்ளார். அதில் ‘நான் செய்ததில் என்ன தவறு இருக்கிறது. நான் கிரிக்கெட்டில் உள்ள விதிமுறைகளின்படிதான் செயல்பட்டேன், 'மன்கட் 'அவுட் செய்தேன். பேட்ஸ்மேன்கள்தான் எப்போதும் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். ஒரு பந்துவீச்சாளர்களுக்கு கொடுக்கப்பட்ட முழுமையான உரிமைகளின் அடிப்படையில்தான் பட்லரை நான் ஆட்டமிழக்கச் செய்தேன். இதில் எந்தவிதமான வாக்குவாதத்துக்கும் இடமில்லை. இதில் கிரிக்கெட் ஸ்பிரிட் கொல்லப்பட்டது எப்படி எனக்குத் தெரியவில்லை’ எனக் கூறியுள்ளார்.

ஒருவருடமாக இந்த மன்கட்டிங் சர்ச்சை ஓயவில்லை. இந்நிலையில் மன்கட்டிங் என சொல்லி ஏன் இந்திய வீரர் ஒருவரை அவமானப்படுத்த வேண்டும் என கேள்வி எழுப்பியுள்ளார். முதல் முதலாக இந்திய வீரர் மன்கட் தான் இதுபோல வீரரை அவுட் ஆக்கினார் என்பதால் மன்கட்டிங் என அழைக்க்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் அதற்கு பதிலாக பிரவுன் அவுட் என அழைக்கலாம் என கவாஸ்கர் தெரிவித்துள்ளார். மன்கட் அவுட் செய்தது பில் பிரவுன் என்பவரைதான். தவறு செய்தது பிரவுன் என்பதால் இனிமேல் பிரவுன் அவுட் என அழைக்கலாம் எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

என் கனவு சரியான நேரத்தில் நிறைவேறியது.. ஆட்டநாயகன் திலக் வர்மா நெகிழ்ச்சி!

மைதானத்துக்குப் படையெடுத்த ஈசல்கள்… என்ன செய்வது எனத் தெரியாமல் போட்டியை நிறுத்திய நடுவர்கள்!

இரண்டே ஆண்டுகளில் பும்ராவை முந்தி சாதனைப் படைத்த அர்ஷ்தீப் சிங்!

தோனி, கோலி, ரோஹித்… என் மகனின் வாழ்கையை வீணடித்து விட்டார்கள்- சஞ்சு சாம்சன் தந்தை கோபம்!

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3வது டி20 போட்டி.. இந்தியா த்ரில் வெற்றி..!

அடுத்த கட்டுரையில்
Show comments