Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கடைசி வாய்ப்பை கோட்டைவிட்ட ஐதராபாத்.. குஜராத்திடம் கேவலமாக தோல்வி..!

Webdunia
செவ்வாய், 16 மே 2023 (07:51 IST)
நேற்று நடைபெற்ற குஜராத் மற்றும் ஐதராபாத் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் போட்டியில் ஹைதராபாத் அணி 34 ரன்கள் வித்தியாசத்தில் கேவலமாக தோல்வி அடைந்தது.

முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணி 9 விக்கெட் இழப்பிற்கு 188 ரன்கள் அடித்தது. அந்த அணியின் சுப்மன் கில் அபாரமாக விளையாடி சதம் அடித்தார். இதனை அடுத்து 189 என்ற இலக்கை நோக்கி விளையாடிய ஹைதராபாத் அணி ஆரம்பத்தில் இருந்தே தடுமாறி வந்தது.

முதல் மூன்று ஓவர்களில் மூன்று விக்கெட்டுக்களை இழந்த அந்த அணி அதன் பின் ஒரு கட்டத்தில் 59 ரகளுக்கு ஏழு விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது. கிளாசன் மட்டும் ஓரளவுக்கு நிலைத்து விளையாடி 64 ரன்கள் அடித்தார். இறுதியில் 20 ஓவர்களில் 9 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 154 ரன்கள் மட்டுமே ஹைதராபாத் எடுத்ததால் தோல்வி அடைந்தது.

நேற்றைய தோல்வி மூலம் ஹைதராபாத் தொடரில் இருந்து வெளியேறி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் நேற்றைய வெற்றியின் மூலம் குஜராத் அணி 18 புள்ளிகளுடன் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை அணியைப் பாருங்க.. அதுதான் வீரர்களுக்கு வேண்டும் – லக்னோ அணி உரிமையாளரை சீண்டிய ராகுல்!

நானும் கோலியும் அந்த போட்டியில் செய்த தவறு குறித்து இன்னமும் பேசிக்கொண்டிருக்கிறோம்- மனம் திறந்த ராகுல்!

‘ஏன் அவரு இவ்ளோ கோபப்படுறாரு?.. நான் சொன்னத கோலியே ஒத்துப்பாரு’- சாந்தமாக பதில் கொடுத்த பாண்டிங்!

டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் பவுலிங் பயிற்சியாளராக முன்னாள் இந்திய வீரர்!

சுதந்திரமாக விளையாடும் அணியே தேவை.. LSG அணிக்குப் பதிலடி கொடுத்த கே எல் ராகுல்!

அடுத்த கட்டுரையில்
Show comments