Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வருவோம் அடுத்த வருடம் சூறாவளியாக! தோல்விக்கு பின் இம்ரான் தாஹிர் டுவீட்!

Webdunia
திங்கள், 13 மே 2019 (06:38 IST)
நேற்று நடைபெற்ற 2019ஆம் ஆண்டின் ஐபிஎல் இறுதி போட்டியில் சிஎஸ்கே அணி ஒரு ரன் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. அந்த அணியின் வாட்சன் கடைசி வரை போராடியும் கடைசி ஓவரில் ரன் அவுட் ஆனதால் நூலிழையில் கோப்பையை தவறவிட்டது. 
 
இந்த நிலையில் வெற்றி அடைந்தாலும், தோல்வி அடைந்தாலும் டுவிட்டரில் ஆவேசமாக டுவீட் போடும் ஹர்பஜன்சிங் நேற்றைய தோல்விக்கு பின் எந்த டுவீட்டையும் பதிவு செய்யவில்லை. இருப்பினும் இம்ரான் தாஹிர் வழக்கம்போல் தமிழக ரசிகர்களுக்கு நன்றி கூறி ஒரு டுவீட்டை பதிவு செய்துள்ளார். அவர் தனது டுவிட்டரில் கூறியதாவது:
 
'என் இனிய தமிழ் மக்களே! விடை பெறுகிறேன் இங்கிருந்து, உங்கள் உள்ளங்களில் இருந்து. அன்பு, தோழமைக்கு எடுத்துக்காட்டாக விளங்கிய என் உடன் பிறப்புகளே நன்றி! வருவோம் அடுத்த வருடம் சூறாவளியாக.. என்றென்றும் உங்கள் அன்பு சகோதரன். நில்லாமல் இருக்கட்டும் விசில், எடுடா வண்டிய ... போடுடா விசிலை' என்று இம்ரான் தாஹிர் பதிவு செய்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நான் போகாத ப்ளே ஆஃப்கு யாரும் போக விட மாட்டேன்! - லக்னோவை பழிவாங்கிய சன்ரைசர்ஸ்!

டெஸ்ட் போலவே டி 20 கிரிக்கெட்டை ஆடமுடியும்… சாய் சுதர்சனைப் பாராட்டிய சேவாக்!

லுங்கி இங்கிடிக்குப் பதிலாக ஜிம்பாப்வே வீரரை ஒப்பந்தம் செய்த RCB!

டீம் வெற்றிக்கு கேப்டன்தான் காரணம்.. வெளில உட்காந்திருப்பவர் அல்ல! - கம்பீரை தாக்கிய கவாஸ்கர்!

ஆசிய கிரிக்கெட் தொடர்களில் இருந்து வெளியேற பிசிசிஐ முடிவு!

அடுத்த கட்டுரையில்
Show comments