Webdunia - Bharat's app for daily news and videos

Install App

89 ரன்கள் முன்னிலையில் இரண்டாம் நாள் ஆட்டத்தை முடித்த இந்தியா!

Webdunia
வெள்ளி, 5 மார்ச் 2021 (17:12 IST)
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான நான்காம் டெஸ்ட்டின் இரண்டாம் நாளில் இந்தியா ஆதிக்கம் செலுத்தியுள்ளது.

இந்தியா மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கு இடையே அகமதாபாத் மைதானத்தில் நடைபெற்று வரும் நான்காவது மற்றும் இறுதி கிரிக்கெட் டெஸ்ட் போட்டி நடந்து வருகிறது, இந்த போட்டியில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 205 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அதையடுத்து களமிறங்கிய இந்திய அணிக்கு ரோஹித் ஷர்மா நிதானமான தொடக்கத்தை அமைத்துக் கொடுத்தார். கில், புஜாரா மற்றும் கோலி ஆகியோர் ஏமாற்றம் அளித்தனர்.

ரோஹித் ஷர்மா 49 ரன்களில் ஆட்டமிழக்க, பண்ட் மற்றும் வாஷிங்க்டன் சுந்தர் ஆகியோர் நிலைத்து நின்று அணியை சரிவில் இருந்து மீட்டனர். பண்ட்  அதிரடியாக 118 பந்துகளில் 101 ரன்கள் சேர்த்து ஆண்டர்சன் பந்தில் ரூட் வசம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். இரண்டாம் நாள் ஆட்டமுடிவில் இந்தியா 7 விக்கெட் இழப்புக்கு 294 ரன்கள் சேர்த்துள்ளது. வாசிங்க்டன் சுந்தர் 60 ரன்களுடனும் அக்ஸர் படேல் 10 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இந்திய அணி 89 ரன்கள் முன்னிலைப் பெற்றுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டி.. டாஸ் வென்ற லக்னோ எடுத்த முடிவு.. ஆடும் லெவனில் யார் யார்?

கடைசி பந்தில் 23 ரன்கள் தேவை.. கொல்கத்தா அணி 1 ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி

கலீல் அகமது ஓவரில் இப்படி ஆகும் என யாரும் நினைத்து கூட பார்க்கவில்லை: ஸ்டீபன் பிளம்மிங்

RCBக்கு ஆதரவாக செயல்பட்ட அம்பயர்! ப்ரேவிஸ்க்கு அவுட் கொடுத்ததில் சர்ச்சை!

2 ரன்கள் வித்தியாசத்தில் போராடி தோற்ற சிஎஸ்கே.. புள்ளிப்பட்டியலில் ஆர்சிபி முதலிடம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments