Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தெற்காசிய கால்பந்து தொடர்: அரையிறுதிக்கு இந்தியா தகுதி

Webdunia
வியாழன், 26 செப்டம்பர் 2019 (08:13 IST)
18 வயதினருக்கான தெற்காசிய கால்பந்து தொடர் போட்டி கடந்த சில நாட்களாக நடைபெற்று வரும் நிலையில் இந்திய அணி தற்போது அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது
 
 
பி பிரிவில் இடம் பெற்ற இந்திய அணி வங்கதேசம் மற்றும் இலங்கை அணிகளுடன் மோதியுள்ளது.  முதல் போட்டியில் வங்கதேசம் அணியுடன் மோதிய இந்தியா அந்த போட்டியை டிரா செய்தது
 
 
இதனையடுத்து இரண்டாவது போட்டியில் இந்திய அணி இலங்கையுடன் மோதியது. இந்த போட்டியில் இந்தியா இலங்கையை 3-0 என்ற கோல் கணக்கில் வென்றது. இதனை அடுத்து இரண்டு புள்ளிகள் பெற்ற இந்திய அணி பி பிரிவில் முதல் இடத்தில் உள்ளதால் அரையிறுதிக்கு முன்னேறியது. இந்த அரையிறுதியில் ஏ பிரிவில் இரண்டாமிடம் பெற்ற மாலத்தீவு அணியுடன் இந்திய அணி மோதுகிறது
 
 
தெற்காசிய கால்பந்து போட்டியின் அரையிறுதி வரும் 27ஆம் தேதி நடைபெறவுள்ளது.  இந்த அரையிறுதியில் மாலத்தீவு அணியை வீழ்த்தி இந்திய அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

என் கனவு சரியான நேரத்தில் நிறைவேறியது.. ஆட்டநாயகன் திலக் வர்மா நெகிழ்ச்சி!

மைதானத்துக்குப் படையெடுத்த ஈசல்கள்… என்ன செய்வது எனத் தெரியாமல் போட்டியை நிறுத்திய நடுவர்கள்!

இரண்டே ஆண்டுகளில் பும்ராவை முந்தி சாதனைப் படைத்த அர்ஷ்தீப் சிங்!

தோனி, கோலி, ரோஹித்… என் மகனின் வாழ்கையை வீணடித்து விட்டார்கள்- சஞ்சு சாம்சன் தந்தை கோபம்!

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3வது டி20 போட்டி.. இந்தியா த்ரில் வெற்றி..!

அடுத்த கட்டுரையில்
Show comments