Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியாவின் வெற்றியை தீர்மானிப்பது இந்த 3 பேர்தான்; தென் ஆப்பிரிக்கா கேப்டன்

Webdunia
செவ்வாய், 19 டிசம்பர் 2017 (16:41 IST)
கோலி, ரோகித், தவான் ஆகியோரின் ஆட்டத்தை பொறுத்தே இந்தியா வெற்றி பெறும் என தென் ஆப்பிரிக்காவின் முன்னாள் கேப்டன் கிரேம் ஸ்மித் கூறியுள்ளார்.

 
இலங்கை அணியுடன் நடைபெற உள்ள டி20 போட்டிகள் முடிந்த பின் இந்திய அணி தென் ஆப்பரிக்கா செல்கிறது. அங்கு டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 ஆகிய போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. 2013ஆம் ஆண்டு தோனி தலைமையில் தென் ஆப்பரிக்கா சென்ற இந்தியா அணி டெஸ்ட் தொடரில் தோல்வி அடைந்தது. 
 
இந்நிலையில் தென் ஆப்பரிக்காவில் முன்னள் கேப்டன் கிரேம் ஸ்மித், இந்தியாவை வெற்றிப்பெற கோலி, ரோகித் மற்றும் தவான் ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும் என கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:-
 
இந்தியாவின் முன்னணி மூன்று பேட்ஸ்மேன்களான விராட் கோலி, ஷிக்கர் தவான் மற்றும் ரோகித் சர்மா ஆகியோர் தொடர்ந்து சிறப்பாக விளையாடி வருகின்றனர். சிறந்த வகையில் ரன் குவித்ததோடு, வேகப்பந்தில் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளனர். 
 
கடந்த ஆண்டு தென் ஆப்பரிக்கா வந்ததைவிட தற்போது ரோகித் சர்மா சிறந்த வீரராக உள்ளார். தென் ஆப்பரிக்க மண்ணில் இந்தியா வெற்றி பெற வேண்டுமென்றால் இந்த மூன்று பேரும் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டியில் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டியதாகும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாண்டிங் கோலிப் பற்றி கவலைப்படவேண்டாம்… அவர் வேலை அதுதான்… கம்பீர் நெத்தியடி பதில்!

சாம்பியன்ஸ் ட்ராபி விளையாட பாகிஸ்தானுக்கு செல்ல முடியாது… ஐசிசியிடம் தெரிவித்த பிசிசிஐ!

ரோஹித் விளையாட வரலைன்னா.. இவங்கதான் விளையாடுவாங்க! - கம்பீர் அதிரடி முடிவு!

இன்று பத்திரிக்கையாளர்களை சந்திக்கிறார் கம்பீர்… முக்கிய அறிவிப்பு வருமா?

இந்திய அணியோடு ஆஸ்திரேலியா செல்லாத ரோஹித் ஷர்மா.. முதல் டெஸ்ட்டில் பங்கேற்பாரா?

அடுத்த கட்டுரையில்
Show comments