Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையில் இந்தியா-ஆஸ்திரேலியா ஒருநாள் போட்டி: தொடரை வெல்வது யார்?

Webdunia
புதன், 22 மார்ச் 2023 (07:51 IST)
சென்னையில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான மூன்றாவது மற்றும் இறுதி ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று நடைபெற இருக்கும் நிலையில் இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி தொடரை வெல்லும் அணி என்பதால் விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே நடைபெற்ற இரு அணிகளுக்கு இடையிலான இரண்டு ஒருநாள் போட்டிகளில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் தலா ஒரு வெற்றிப் பெற்றுள்ளன. இந்த நிலையில் இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மூன்றாவது மற்றும் இறுதி ஒருநாள் கிரிக்கெட் போட்டி நடைபெற இருக்கும் நிலையில் ரசிகர்கள் நீண்ட இடைவெளிக்கு பின்னர் போட்டியை நேரடியாக பார்க்க ஆர்வம் கொண்டுள்ளனர். 
 
சென்னை கிரிக்கெட் போட்டிக்காக அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளதாகவும் மெட்ரோ ரயில்கள் சிறப்பு ரயில்களை இயக்க இருப்பதாக கூறப்படுகிறது. 
 
மேலும் அரசினர் தோட்டத்திலிருந்து சேப்பாக்கம் மைதானம் வரை செல்வதற்கு இலவச பேருந்துகளையும் மெட்ரோ நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. பல ஆண்டுகளுக்கு பின்னர் சென்னையில் கிரிக்கெட் போட்டி நடைபெறுவதால் சென்னை கிரிக்கெட் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாதியில் நிறுத்தப்பட்ட பஞ்சாப் - டெல்லி போட்டி மீண்டும் நடத்தப்படுமா? யாருக்கு பலன்?

எங்கள் நாட்டில் ஐபிஎல் போட்டியை நடத்த வாருங்கள்: இங்கிலாந்து அழைப்பு..!

சொந்த நாட்டிற்கு புறப்படத் தொடங்கிய கிரிக்கெட் வீரர்கள்! ஐபிஎல் அவ்வளவுதானா?

பாகிஸ்தான் ப்ரீமியர் லீகா? ஐபிஎல்லா? அரபு அமீரகம் எடுக்கப் போகும் அதிரடி முடிவு!

ஐபிஎல் தொடரை ஒரு வாரத்துக்கு தள்ளிவைக்கிறோம்… பிசிசிஐ அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments