Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜடேஜா 4 விக்கெட், அஸ்வின் 2 விக்கெட்.. முடிய போகுது ஆஸ்திரேலியா இன்னிங்ஸ்..!

Webdunia
வியாழன், 9 பிப்ரவரி 2023 (14:23 IST)
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையே நாக்பூர் மைதானத்தில் முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த நிலையில் தொடக்க ஆட்டக்காரர்களான வார்னர் மற்றும் உஸ்மான் ஆகிய இருவரும் ஒரே ரன்னில் ஆட்டம் இழந்தனர். 
 
அதன் பின் டேவிட் வார்னர் மற்றும் லாபுசாஞ்சே ஓரளவு நிலைத்து ஆடினாலும் இந்திய பந்து வீச்சாளர்களின் அபார பந்துவீச்சு காரணமாக தொடர்ச்சியாக அடுத்தடுத்து விக்கெட் விழுந்தன.
 
குறிப்பாக ரவீந்திர ஜடேஜாவின் பந்து வீச்சுக்கு 4 விக்கெட்டுக்கள் சரிந்தன. ரவிச்சந்திரன் அஸ்வின் தனது பங்குக்கு இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார். சிராஜ் மற்றும் ஷமி ஒரு விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளனர். 
 
இந்த நிலையில் ஆஸ்திரேலிய அணி சற்று முன் வரை 60 ஓவர்களில் எட்டு விக்கெட்டுகளை இழந்து 174 ரன்கள் எடுத்துள்ளதால் இன்னும் சில நிமிடங்களில் ஆஸ்திரேலிய அணியின் இன்னிங்ஸ் முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கோலியின் ஓய்வு முடிவைத் திரும்பப் பெற சொல்லி பிசிசிஐ கேட்கவில்லை.. வெளியான தகவல்!

சொன்னா சொன்னதுதான்..! டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தார் விராட் கோலி!

ஐபிஎல் தொடங்கினாலும் ஸ்டார்க் வர மாட்டார்! அதிர்ச்சியில் உறைந்த டெல்லி கேப்பிட்டல்ஸ் ரசிகர்கள்!

ஐபிஎல் போட்டிகளில் விளையாடத் தயங்கும் வெளிநாட்டு வீரர்கள்.. வெளியான புதிய தகவல்!

எஞ்சிய ஐபிஎல் போட்டிகளை நடத்த மூன்று மைதானங்கள் தேர்வு..!

அடுத்த கட்டுரையில்
Show comments