Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையில் உலக கோப்பை கிரிக்கெட்.. ஆஸ்திரேலியாவின் முக்கிய விக்கெட்டை வீழ்த்திய பும்ரா..!

Webdunia
ஞாயிறு, 8 அக்டோபர் 2023 (15:13 IST)
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையிலான உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில்  டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பேட்டிங் செய்ய தேர்வு செய்யப்பட்ட நிலையில் டேவிட் வார்னர் மற்றும் மிட்செல் மார்ஷ் ஆகியோர் களமிறங்கினர்.

இதில் மிச்சல் மிட்செல் மார்ஷ் இரண்டாவது ஓவரிலேயே ரன் ஏதும் எடுக்காமல் அவுட் ஆனார். அவரை பும்ரா அபார பந்து வீச்சில் வீழ்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்போது வார்னர் மற்றும் ஸ்டீவ் ஸ்மித் ஆகிய இருவரும் விளையாடி வருகின்றனர்.
 
சற்றுமுன் ஆஸ்திரேலியா 15 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 71 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.  இந்தியா விளையாடும் முதல் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி என்பதால் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இந்த போட்டியை ஏராளமானோர் நேரில் பார்த்து ரசித்து வருகின்றனர்

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாதியில் நிறுத்தப்பட்ட பஞ்சாப் - டெல்லி போட்டி மீண்டும் நடத்தப்படுமா? யாருக்கு பலன்?

எங்கள் நாட்டில் ஐபிஎல் போட்டியை நடத்த வாருங்கள்: இங்கிலாந்து அழைப்பு..!

சொந்த நாட்டிற்கு புறப்படத் தொடங்கிய கிரிக்கெட் வீரர்கள்! ஐபிஎல் அவ்வளவுதானா?

பாகிஸ்தான் ப்ரீமியர் லீகா? ஐபிஎல்லா? அரபு அமீரகம் எடுக்கப் போகும் அதிரடி முடிவு!

ஐபிஎல் தொடரை ஒரு வாரத்துக்கு தள்ளிவைக்கிறோம்… பிசிசிஐ அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments