Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காமன்வெல்த் போட்டி - தங்கவேட்டையில் இந்தியா; 6 தங்கங்களுடன் 3-வது இடத்திற்கு முன்னேற்றம்

Webdunia
ஞாயிறு, 8 ஏப்ரல் 2018 (10:18 IST)
காமன்வெல்த் துப்பாக்கி சுடுதலில் இந்தியாவுக்கு 2 பதக்கங்கள் கிடைத்துள்ளது. ஹரியானவை சேர்ந்த மனு பார்க்கர் தங்கம் வென்றார்.
ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் 21-வது காமன்வெல்த் போட்டியில் பளுதூக்கும் பிரிவில் இந்தியாவுக்கு ஏற்கனவே இரண்டு தங்கம் கிடைத்திருந்தது. இதனை தொடர்ந்து நேற்று நடைபெற்ற ஆடவர் 77கிலோ பளுதூக்கும் பிரிவில் தமிழக வீரர் சதீஷ்குமார் சிவலிங்கம் தங்க பதக்கம் வென்றார். மேலும் 89 கிலோ எடை பிரிவு பளுதூக்கும் போட்டியில் இந்தியாவின் வெங்கட் ராகுல் தங்கம் வென்றார். 
 
இந்நிலையில் இன்று நடைபெற்ற மகளிருக்கான 69 கிலோ எடைப்பிரிவு பளுதூக்குதல் போட்டியில் இந்திய வீராங்கனை பூனம் யாதவ் தங்கப் பதக்கம் வென்றார். அதேபோல் பெண்களுக்கான 10 மீட்டர் துப்பாக்கி சுடுதலில் ஹரியானவை சேர்ந்த 11-ம் வகுப்பு மாணவி மனு பார்க்கர் தங்கம் வென்றார். பஞ்சாப்பை சேர்ந்த ஹூனா சித்து வெள்ளிப்பதக்கத்தை வென்றார். இதன் மூலம் இந்தியா 6 தங்கப் பதக்கங்களை இதுவரை பெற்றுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை அணியைப் பாருங்க.. அதுதான் வீரர்களுக்கு வேண்டும் – லக்னோ அணி உரிமையாளரை சீண்டிய ராகுல்!

நானும் கோலியும் அந்த போட்டியில் செய்த தவறு குறித்து இன்னமும் பேசிக்கொண்டிருக்கிறோம்- மனம் திறந்த ராகுல்!

‘ஏன் அவரு இவ்ளோ கோபப்படுறாரு?.. நான் சொன்னத கோலியே ஒத்துப்பாரு’- சாந்தமாக பதில் கொடுத்த பாண்டிங்!

டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் பவுலிங் பயிற்சியாளராக முன்னாள் இந்திய வீரர்!

சுதந்திரமாக விளையாடும் அணியே தேவை.. LSG அணிக்குப் பதிலடி கொடுத்த கே எல் ராகுல்!

அடுத்த கட்டுரையில்
Show comments